பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்ைத்திற்கும் வேரான உழைப்பை மதிக்கக் கற்றுக் கொடுப்பது. கல்வியின் கடமையாகும். சோவியத் சமு தாயம், மூளை உழைப்பையும் உடல் உழைப்பையும் சிப மாகவே மதிக்கிறது. எனவே, உழைப்பின் மேல் அன்பு என்னும் நறுங் காற்றையே, சோவியத் மாளுக்கர்கள் சுவாசிக்கிருர்கள். தொடக்கப் படிவங்களுக்கு மேல், எல்லா மாணவர்களுமே விதிக்கப்பட்ட அளவு தொழிற் பயிற்சி பெறுகிருர்கள். இதல்ை சோவியத் நாட்டில், உயர்நிலைப் பள்ளி மாளுக்கர்களை வாழ்க்கைக்குப் போ திய அளவு ஆயத்தம் செய்வதோடு, ஒவ்வொருவருடைய திறன்களையும் ஆற்றல்களையும் வளர்த்து, அவர்கள் சமு. தாயத்தில் பயனுள்ள மக்களாக வாழ வகை செய்கிறது. முழுமையான உயர்நிலைப் பள்ளிகள், மாளுக் கருக்குத் தேவையான அறிவைக் கொடுக்கிறது. அதோடு, கற்கும் பழக்கத்தை வளர்க்கிறது; உயர் கல்வியைத் தொடங்க ஆயத்தம் செய்கிறது. மேல் வகுப்புகளின் பாடத் திட்டத்தில், இலக்கியம், வரலாறு, சமூக இயல், பொருளியல், பூகோளம், அயல் மொழியொன்று, கணிதம், பெளதீகம், வேதியல், வான நூல், உயிரியல், வரை படம் போடுதல், உடற் பயிற்சி ஆகியவை சேர்ந்துள்ளன. ஏட்டறிவைச் செயல்படுத்துவதைப் பற்றி, இந்நிலையில் அதிகக் கவனம் செலுத்துகிருர்கள். ஒவ்வொரு பாடத் திலும் கடைசியாகக் கண்டு பிடித்தவைகளே. சோவியத் விஞ்ஞானிகளும் கல்விக்கலை வல்லுநர்களும் விழிப்பாகக் கவனித்து வருகிருர்கள். நடைமுறையில் உள்ள கற்பிக் கும் முறைகளின் பலன்களையும் கூர்ந்து ஆராய்கிருர்கள். இவற்றின் அடிப்படையில், பாடத் திட்டங்களே மறு பரி சீலனை செய்ய நடவடிக்கை எடுக்கிருர்கள். பாடத் திட்ட மாற்றங்களைத் துண்டுவதிலும் மதிப்பிடுவதிலும் மறு பரிசீலனை செய்வதிலும் மாஸ்கோவில் உள்ள, கல்வி விஞ் ஞானக் கழகத்தின் பங்கு பெரிதாகும். - சோவியத் ஒன்றியத்தில், கல்வி, மக்கள் அனைவரு டைய முதல் கவனத்தைப் பெற்றுள்ளது. கல்வித் திட் டத்திலும் தங்கள் குழந்தைகளின் கல்வியிலும் சோவியத் 67