பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டளையிட்டார். அக்கட்டளை, சோவியத கொள்கையின் கூருக உள்ளது. சோவியத் கல்வி நிலையங்களுக்கு, இதுவே, வழி காட்டும் கொள்கையாக விளங்குகிறது. சோவியத் ஒன்றியத்தில் உயர் கல்விக்கான நிலையங் களே இரண்டாகப் பிரிக்கலாம். அவை: (1) பல்கலைக் கழகங்கள். (2) தொழிலுக்குரிய அல்லது சிறப்பு உடைய உயர் கல்விக் கழகங்கள். பல்கலைக் கழகங்கள், இயற்கை சாத்திரம், அளவிடக் கூடிய விஞ்ஞானம், மானிடயியல் ஆகிய அனைத்திலும் நாட்டம் செலுத்துகின்றன. பல்கலைக் கழகங்களுக்கு இருவகைப் பணிகள் உண்டு. தொழிற் சாலைகள், வேளாண்மை, உயர்நிலைப் பள்ளி, சிறப்புப் பயிற்சி உயர் நிலைப் பள்ளி, கலை நிறுவனங்கள், அரசு அலுவல்கள் , ஆகியவற்றிற்குத் தேவையான திறமையுடையவர்களே பல்கலைக் கழகங்கள் ஆயத்தம் செய்கின்றன. ஆய்வு நிலையங்கள், சோதனைக் கூடங்கள், உயர் கல்வி நிறுவனங் கள் ஆகியவற்றிற்கான விஞ்ஞானிகளையும் ஆசிரியர்களை யும் பயிற்றுவிப்பது பல்கலைக் கழகங்களின் மற்ருெரு பணியாகும். சோவியத் பல்கலைக் கழகங்கள், இரஷ்ஷியக் கல்வி முறையின் சிறந்த மரபுகளுக்கு வாரிசுகளாக விளங் குகின்றன. இவை, அறிவைப் பாதுகாக்கும் கருவூலங் களாகவும் அதைப் பரப்பும் கருவிகளாகவும் செயல்படு கின்றன. - சோவியத் பல்கலைக் கழகங்களில் நடக்கும் விஞ்ஞான ஆராய்ச்சி, சோவியத் ஒன்றியத்திலும் உலகிலும் விஞ் ஞான வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிந்துள்ளது. உயர் கல்வி நிலையங்களுக்கு ஆசிரியர்களை ஆயத்தம் செய்து கொடுப்பதாலும் அந்நிலையங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதாலும் நாட்டின் உயர் கல்வி பல்கலைக் கழகங்களின் செல்வாக்குப் பெரிதாக உள்ளது. பல்கலைக் கழகங்கள், அகண்ட அடிப்படை அறிவின் மேல் கவனம் செலுத்துகையில், உயர் கல்விக் கழகங்கள் 77