பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்படுத்தும். இவற்றுக்குத் தலை வணங்காது, எடுத்துக்கொண்ட கவி வடிவத்துக்குள்ளே யே மூலக் கவிதையின் கருத்தையும் உணர்ச்சியையும் இழுத்து மடக்கிக் கொண்டுவந்து நிலை நிறுத்து வதே மொழிபெயர்ப்பவனின் கடமையாகும். இந்தக் கவிதை களைத் தமிழாக்கியபோது, நான் இந்தக் கடமையை மறக்காது, கவிதைகளின் கருத்தும் உணர்வும் சிதையவோ சிதறவோ செய் - யாதவாறு அவற்றுக்குத் தமிழ் வடிவம் அளிப்பதிலேயே பெரிதும் கவனம் செலுத்தியுள்ளேன். இம்முயற்சியில் ஏற்படும் இடர்ப் பாடுகளைத் தவிர்க்கும் விதத்தில் அதற்கேற்ப எளிய நடையையும், வடிவத்தையும், சந்தத்தையும், பயன்படுத்தியுள்ளேன். இத் தொகுதியிலுள்ள கவிதைகளில் மயாகோவ்ஸ்கியின் கவிதைகள் தனித்தன்மை வாய்ந்தவை. கனல் தெறிக்கும் வார்த்தைப் பிரயோ கமும், கம்பீரமான நடையும் அவருக்குக் கை வந்தவை; மேலும், அவர் தம் கவிதையைச் சொல்லும் முறையிலும் தனியொரு பாணி யைக் கையாண்டவர். சொல்லப்போனால், ரசிகனை முன்னிறுத் திக் கொண்டு, அவனிடம் நேர்முகமாகச் சொல்லும் பாணியி லேயே அவரது பல கவிதைகள் உருவாகியுள்ளன. இதனால் அவ ரது கவிதைக்கு இதயத்திலே வந்து தைக்கும் அசுரத்தனமான வலிமையுண்டு. இதனால்தான் அவர் உயிர் வாழ்ந்த காலத்தில் அவர் தமது கவிதைகளைத் தாமே ரசிகப் பெருமக்களுக்குச் சொல்லிக் காட்டுவார். இவ்வாறு அவர் சொல்வதைக் கேட்க, ரசிகர்களும் பெருவெள்ளமாகத் திரண்டு வருவது வழக்கம். அவரது கவிதை சொல்லும்' பாணி அப்படி; கவிதை வடிவமே அதுதான். எனவே அவரது கவிதைகளை மொழிபெயர்க்கும்போது நான் அவரது இந்தப் பாணியையும் வடிவத்தையும் வலுக்குன்றாமல் தமிழில் கொண்டுவர முயன்று, அதில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டுள்ளேன்.

சென்ற பத்தாண்டுக் காலத்தில், பல்வேறு சமயங்களில்,

சந்தர்ப்பம் கிட்டியபோதெல்லாம் நான் சோவியத் நாட்டுக் கவிதைகளைத் தமிழாக்கி வந்துள் ளேன். அவ்வாறு தமிழாக் கிய கவிதைகளில் ஏறத்தாழச் செம்பாதிப் பகுதியை மட்டும் தேர்ந் தெடுத்து இந்தத் தொகுதியை நான் உருவாக்கியுள்ளேன். மொத் தத்தில் இந்தத் தொகுதியில் அறிமுகமாகும் கவிதைகள் சோவியத் கவிஞர்களின் இதயத்தைத் தொட்டுணர்ந்து இனம் காணும் முயற்சியில் வாசகர்களுக்குக் கணிசமான அளவில் துணை நிற்கும் எனக் கருதுகிறேன். இந்தக் கவிதைகள் பலவும் சோவியத் நாடு' இதழில் வெளிவந்த காலத்தில் இவற்றுக்கு நல்ல வரவேற்பும் பாராட்டும் கிட்டி வந்தன. அந்த வர வேற்பு இந்தத் தொகுதிக்கும் கிட்டும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. Right//centerதிருநெல்வேலி 1-5-65 ரகுநாதன்