பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பவித்திரமாய்த் தொங்கியொளி பரப்புவதைக் "கண்டறிந்தேன்! ஆடம்பரம் மிகுந்த ஆலயங்கள், பளபளப்பாய் வேடமிட்டுத் தோற்றுகின்ற வெளிப்பகட்டு விளம்பரங்கள் ஆனவற்றைக் கண்டே அதிசயிப்பார் மானிடர்கள்! ஆனாலும் அத்தகைய டாம்பீகம் அத்தனையும், இனிமையொடும் எளிமையொடும் இசைந்திருக்கும் அவர் கவிதைத் தனியொன்றுக் கீடாமோ? தரளமணி மாலையெனக் கதிர் பரப்பி, மானிடர் தம் சிந்தையெல்லாம் தான் கவரும் அதிசயமாய், உலகினர் தம் அரியபல செல்வத்துள் செல்வ! தாய், எந்நாளும் சிரஞ்சீவி யாயிலங்கிப் பல்விதத்தும் உதவுமவர் பாட்டுக்கே ஈடாமோ? அவருளத்தை விருந்தளிக்கும் அவர் கவிதை! என்னுளத்தை அவர்கவிககே அதிதியென இந்நாளில் அர்ப்பணிப்பேன்! 98