பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. கல்கத்தா காரா ஸித்லேவ் கரையெறியும் கடலலைகள் கல்கத்தா நகரின் கதவத்தை மெலத்தட்டும்; கானமுமே பாடும்; திரையெறியும் நுரையதனைத் திரட்டிவலைப் பின்னல் திறமையுடன் நெய்துவரும்; தினமுழுதும் சோராத் துறைமுகத்தில் சரக்கெல்லாம் துரிதமோ டிறங்கும்; தோணிகளும் விரைந்தோடும்; கப்பல்பல் கூவும். 1. இறப்பதற்கே அரிதான மா நகரம்! ஆங்கே . மந்தையெனக் கட.ல்லையைக் காற்றென்னும் மேய்ப்பன் விரட்டிடுவான்; பறவைகள்போல் விண்ணென்று தாவி விரைந்தோடிக் கப்பலுக்குள் வாழைப்பழம் என்றும்; இரவியொளி பகலினிலே கதகதப்போ டெரியும்; இரவினிலோ தண்மதியம் இனியவொ? சொரியம். துறைமுகத்தை விட்டகன்று கரையருகே கண்ணில் தோன்றியதோர் இல்லத்தை நோக்கியவண் சென்றேன். கரையடுத்த இல்லத்தின் கற்களெல்லாம் அந்தக் கவியரசன் தாகூரின் புகழ்பாடக் கண்டேன். அதிதியென வந்தவெனை ஆர்வத்தோ டாங்கே அவரேயென் முன்வந்து வரவேற்றாற் போல் புதியதொரு கற்பனையில் பூரித்தேன். அந்தப் போதினிலே அவரென்னைப் புல்லியும் சரித்து முதியசிரந் தனைத் தாழ்த்தி என்னிடத்தில் பேச முனைந்திட்டார். பின்னரந்த முதியவர் தம் நகரின் அதிசயத்தைக் காண்பதற்காய் இருபேரும் ஒன்றாய் ஆவலுடன் எழுந்திருந்து வழி நடந்து சென்றோம். அரியபல கற்பனையில் ஆழ்ந்திருந்த போதும் அவர் நடந்து சென்றிட்ட வழிகடந்து அந்தப் பெரியபஜார் வீதிக்கே வந்திட்டோம். ஆங்கே பேசுகின்ற கிளிகண்டோம்; வாணிகரின் கூட்டம் - உரிமையொடு நமையழைக்கும் உரத்த குரல் கேட்டோம்;