பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறுமிவிட்டுப் பாய்ந்துசெலும் மோட்டாரும் கண்டோம். அரியபல் பூப்போட்ட அழகிய பட்டாடை- அணியணியாய்க் காட்சிதரும் அதிசயமும் கண்டோம், சரிகைப்பொன் னிழைகொண்டு சமைத்த துகில் வர்க்கம் தகதகத்துக் கண்பறிக்கும் காட்சியையும் கண்டோம். பெருமையுடன் இந்தியத்தாய் பெற்றெடுத்துத் தந்த பெண்குலத்தார் அருந்துதற்கு நன்னீரை மொண்டு தெருவழியே மண்குடத்தைத் தோள்களிலே தாங்கித். திருமுகத்துப் பொலிவோடு செல்வதையும் கண்டோம். என்னருuைtக் கல்கத்தா திருநகரே! உன்னை இன்றேதான் கண்டேனோ? இல்லையென்று சொன்னால் உன்னை வெகு நாட்களுக்கு முன்னமேயான் தாகூர் உதவியினால் கண்டேனோ? உறவுங்கொண் டேனோ? 14)