பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1930 செப்டம்பர் 14-ம் தேதியன்று தாகூர் சோவியத் யூனியனிலுள்ள வீடற்ற அனாதைச் சிறுவர்களின் குடியிருப்பான முதல் குழந்தைகள் கம் யூனுக்கு விஜயம் செய்தார். அவ்வமயம் கவிஞர் அ. பிலதோவ் அந்த அனாதைக் குழ ற் தைகளில் ஒருவராக அங்கிருந்தார். பின்னர் வளர்ந்து பெரியவராகி, தொழிலாளி வர்க்கக் கவிஞராக உருப்பெற்ற பிலதோன் இந்தக் கவிதையில் தாம் பால்யத்தில் சந்தித்த தாகூரின் வரவை நினைவு கூர்ந்து பாடுகிறார். 53. குழந்தைகள் கம்யூனில் தாகூர் அலெக்சாந்தர் பில்தோல் பனிபொய்யும் பருவமது ; என்றாலும் பகலவனின் இனிமையினை யாமுணர்ந்தோம். இந்தியநன் னாட்டி, னது தருவினங்கள் எம்மருகே தானோங்கி வளர்வது போல் ஒரு புதுமை! அமைதியொடும் உள்ளத்தே ஆக லோடு) அவரருகே அமர்ந்திருந்தோம். அழகுமலர் இதழ்போலே குவிந்திருந்தோம்! மலரிதயம் போல்வரும் கொலுவிருந்தார்! கீதமொன்றை யாம்கூடிப் பாடினே; கேட்டிருந்த போதா'ங்கே தாகூரும் புன்னகையும் தான் புரிந்தார். யுத்தத்தின் சீரழிவால் உருக்குலைந்து போகாமல் பத்திரமாய்க் காப்பளித்து, பாருலகில் அனாதைகட்குக் குடியிருக்க நல்வீடும் குடும்பத்துச் சூழ்நிலையும் கடிதளித்து வாழ்வளித்த காட்சியினை எம்மிடத்தே கவிஞரவர் கண்ணரக் கண்டிட்டார் என்பதையும் குவிந்திருந்த நாங்களெலாம் அறிந்தோம்; குதுகலித்தோம். பெற்றெடுத்த தந்தையர் தம் பெயரறியா, பெற்றோர்கள் , உற்றகரிக்கும் ஆதரவை உணர்ந்தறியாப் பாற்பல்ராம் பிள்ளையர்கள் தங்கள் து பிரமிப்பும் நட்புணர்வும் ', உள்ளொ ளிரும் கண்களில் உற்றவரை நோக்கிடவும்,