பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னவரைத் தாகூரும் அருமையுடன் எதிர்நோக்கித் தன்னிதயத் தன்பொளியால் தழுவிமனம் குளிர்ந்தார். உள்ளத்தைத் திறந்தாங்கே ஒன்றுபட யாமவரை மெள்ளக் கவனிக்கும் வேளையிலே, ஆங்கவரும் அன்னியராய்த் தோற்றாமல், ஆண்டில் மிகக்குறைந்த சின்னவராய்த் தோற்றியதைக் கண்டோம்; சிலிர்ப்புற்றோம். எமைவளர்க்கும் செவிலியெனும் இரும்பாலை உருக்காலை தழையவர்க்கு நாங்களெலாம் அன்போடு , தானுரைத்தோம், இரவியொளி (போலெமது எதிர்காலம் ஒளிபரப்பி - வரவிருக்கக் கண்டறிந்தோம்; வயல்களிலும் ஆலையிலும் நாங்களெலாம் பணியாற்றும் நாளையிலே, தாகூரின் ஓங்குபுகழ் நாட்டுக்கு உதவிக் கரம் நீட்டித் தொண்டாற்றித் துணைபுரியும் சூழ்நிலையை ஓர் நாளில் கண்டாலும் கண்டிடுவோம் என்பதையும் கண்டுணர்ந்தோம். சென்றுவிட்ட முன்னாளைச் சிந்தித்துப் பார்க்கின்ற இன்றைக்கோ? எம்முடைய இனிய திருக்குமரர் எல்லோரும் ஆளாகி வளர்ந்துவரும் இந்நாளில், நல்லுணர்வும் உள்ளன்பும் நட்புறவும் கொண்டவராய் .. இந்தியநற் பூமியினில் யாங்களெல்லாம் உருக்காலை எந்திரத்தின் உலையதனை இயற்றிப் பணிபுரிந்தோம். இந்தியர்கள் தம்மோடு யாங்களெலாம் பிலாய் நகரில் நந்தா ஒளிவழங்கும் நட்புறவின். தீப்பிழம்பை மூட்டுகின்றோம்! அந்நெருப்பும் மூண்டெழுந்து  : : ' மேலோங்கி : ஆட்டம் கொடுக்காமல், மங்கலொளி அறியாமல். .. எந்நாளும் நின்றெரியும்! தாகூரே! இறப்பறியாப் ' ' ' பொன்னான உம்மிதயம் போலதுவே ஒளிபாய்ச்சும்! : .