பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வள்ளத்தோ ல் 1951-ம் ' ஆண்டில் மாஸ்கோவுக்குச் சென்றிருந்த சமயத்தில் அங் குள்ள. லெனின் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அவ்வாறு அஞ்சலி செலுத்திய சமயத்தில் அவர் எழுதிய பாடல் இது. 54. லெனின் சமாதி முன்னால் மலையாள மகாகவி வள்ளத்தோல் பேரெழில்சேர் பாரிசும், பெருமிதஞ்சேர் லண்டனொடும்" சீர்கொழிக்கும் நியுயார்க்கும் சேர்ந்தொன்றாய் ,ஆன்தொரு மாநகராய்க் காட்சிதரும் மாஸ்கோவைக் கண்ணெடுத்துக் காணுகின்றோர் வியப்புளத்தே கண்டறிய மாட்டாரோ? . புத்தெழில்சேர் விசாலமொடு பொலிந்திருக்கும் ' மாஸ்கோவின் " மத்தியிலே வாய்த்ததொரு மைதானச் சதுக்கத்தில் மேட்டி.மையாய் உடையணிந்தும் மிடுக்கோடு : . நடை.தடந்தும் கூட்டமிட்டு மக்களெலாம் குழுமுகின்றார்! ஆங்கமைந்த, . வழவழப்பாய் கால்வைத்தால் வழுக்குகின்ற தளவரிசை .. பளபளக்கும் கருஞ்சலவைப் படிக்கட்டில் ஏறுகின்றார்! படிக்கட்டின் மேலேறிப் பார்க்கையிலே, கீழமைத்த அடிக்கட்டின் அரங்கத்தே அமைந்ததொரு பீடத்தில் - " மேதகவு நிறைமனத்தை மேவியாவ னாம்லெனினின் பூதவுடல் காட்சிதந்து பொலிந்திருக்கக் கண்டறிவோம்!' மின்விளக்குத் தொகைசிதறும் வெண்ணொளியில் அன்னவன் தன். பொன்னுடலும் பளபளக்கும்! புத்தம் புதுமைநிறை. காலையிளம் பொழுதலர் ந்தாற் போலுமது காட்சி தரும், 108