பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • போலும்' என்று சொல்லுவதும் பொருத்தமிலா

வார்த்தையன்றோ! இருட்டில் கிடந்துழன்ற இரஷ்யாவின் காரிருளை கவிரட்டி யடிக்கவந்த விடியலிளம் பொழுதே உத்தமனாம் லெனிள்தானே! உலகையெலாம்விழிப்பூட்டிச் சித்தம் தெளியவைத்த செங்கதிரும் அவனன்றோ? சொந்தமுள்ள நாட்டினரும், சோதரநல்லுணர்ச்சியொடு வந்தால் விருந்தினரும், வழிபாடு செய்ய வரும் திரு நாட்டின் கோயிலது தேசத்தின் இருள் கடிந்த குருநாதன் பொன்னுடலம் குடியிருக்கும் கோயிலது! கோயிலதன் சன்னிதியைக் குறுகியதும் நாங்கள் த்தத் தூயவனா! மூர்த்திக்குத் துப்யமலர் அருச்சித்தோம்! விடுதலையாம் மார்க்கமன்றி வேறுவகைப் பாதையிற்கால் படுதலையே அறியாத பாதங்கள் தமைக்கொண்ட புனிதன் திருவடியைப் பூசித்து உளம்போற்றி இனிதாய்த் தலைவணங்கி இதயம் களிகூர்ந்தோம்! விண்ணுலகை அவனாவி மேவியபின் இன்றைக்கும்" எண்ணுகின்ற இருபத்தி ஏழாண்டு போனபின்னும் எட்டாத் தொலைக்குலகின் எதிர்கால வாழ்வியலைத் தட்டாது கண்டறிந்து தரிசித்த அத்தகையோன் கண்ணிரண்டும் இமைமூடிக் கவிந்திருக்கக் கண்டாலும் " மண்ணுலகின் நலம் தனையே மனத்தெண்ணித் தியானிக்கும் அறிதுயிலில் ஆழ்ந்திருக்கும் அதிசயமே தானன்றிப் பிறிதில்லை என்றுணரும் பிரமையே மனத்தோங்கும்! பேரரசன் ஜாரென்னும் பெயருடைய வஞ்சமகன் ஈரமிலா தரசாண்ட இழிதகவால், வெங்கொடுமை நரகக் குழிவிழுந்து. நலிந்திட்ட மக்கள்தமைக் காங்கொடுத்துக் கரையேற்றிக் காப்பாற்றி, அன்னவர் தம் நசிவுதனைத் துடைத்த நாயகனின் திருக்கரங்கள் அசைவற்று இருபுறமும், அந்தோ ! கிடந்தனவே!