பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாந்தர் தமைச் சமமாக மதிக்குமொரு மாண்புடைய ஏந்தலவன் லெனின் என்பான் இளைத்துக் களைத்துவிட்ட உருஷியத்தை முறுக்கேற்றும் உணர்வேற்றும் ' கதிர்க்குவத்தை வருஷிக்கும் சூரியனாய் வையகத்தில் வந்துதித்தான்! இந்தியநன் னாட்டினர் தம் இழிவகற்ற அகிம்சையெனும் சந்திரனைத் தோற்றுவித்தான் சத்தியவான் .. ' காந்திமகான் ! இந்த இரு வீரர்களும் இருள்விலக்கி ஒளிவழங்கும் சந்திரனும் சூரியனும் தாமாவார் நமக்கன்றோ ? இன்னவரில் ஒரு தலைவன் இவ்வுலகின் புண் களுக்குப் பொன்னிழையால் நெய்தவொரு புனிதத் திரைகிழித்துக் கட்டுவித்தான்! மற்றவனோ சாந்தியெனும் களிம்பதனை ஒட்டுவித்தான்! என்பதை நாம் உணர்ந்தறிய " மாட்டோமோ? இருபேரும் இவ்வுலகில் இணையற்றுத் தான் விளங்கும் - பெருவீர நாயகர் தாம் பேசரிய கொடுங்கொன்மைக் குறைபோக்கி வெற்றிகண்டு, குவலயத்தே கொடுங்கோலர் சிறைமீட்டு வந்த இரு தேசத்தின் செம்மல்கள் தாம்! தலைவனவன்.பொன்னுடலைத் தைலமிட்டுப் பேணிவைத்த நிலையத்னைத். கண்ணர நெஞ்சாரக் காட்டும் அந்த அடிக்கட்டின் அரங்கத்துக் கருகினிலே முழவுயரப் படிக்கட்டு டன் அமைந்து பசும்புல்லின் நற்படுகை தளதளக்க, வெண்ணிறத்துச் சலவைக்கல் சின்னங்கள் பள பளக்க விளங்குமொரு பீடமொன்றைப் பார்த்திட்டோம் 105