பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொந்தத்தாய்த் திருநாட்டுச் சுதந்திரத்துக் காய்ரத்தம் சிந்திஉயிர் விடுத்த தியாகிகளாம் வீரர்களே ஆங்கிருந்த பீடத்துக் கடியினிலே எந்நாளும் நீங்காத் துயில்வசத்தே நிரந்தரமாய்ப் பட்டுவிட்டார்! வீரர் குலச் செல்வங்காள்! வீழ்ந்துபட்ட நீரெல்லாம் பா ரகத்துத் திருமண்ணே பாசறையாய்க் கொண்டு . விட்டீர்! பூதலத்துள் துஞ்சுமுங்கள் பொன்னான திருமேனி மீதினிலே LIசும்புல்லே மேல்வளர் ந்து உமைப்போர் த்தும்? என்றாலும் உங்களது இனிய திருத் தாய்நாடு நன்றாகி விட்டதையா! நாளெல்லாம் நெடுந்துயிலில் சொக்கிக் கிடந்துழன்ற சோம்பல் தனைமுறித்துப் : பொக்கென்று விழித்தெழிந்து புதுவாழ்வு பூண்ட தையா! - சோ தர நல் லுணர்ச்சியொடு தூதுவந்த நல்லவரே! . ஈதெனக்குச் சொல்லிடுவீர்! இவ்வுலகில் தலைப்பு:யந்த 'நாட்டுக்காய்த் தம்முயிரை நமன்கையில் சேர்த்துரிமை ' (வேட்டவ ராம்கடமை வீரருக்குச் சாவேது? இருபத்தும் ஓரைந்தும் இணைந்திருக்கும் கோடியெனப் பெருமக்கள் தொகைபடைத்த திருநாடே! நீ பயந்த மக்களிடைச் சோம்பலில்லை; மனக்கவலை ஏதுமில்லை; தக்க்கல்வி ஞானமில்லாத் தற்குறிகள் யாருமில்லை! ஆண்ட. கையும் பெண்மகளும் அனைவருமே சமவுரிமை பூண்டொழுகி வாழ்ந்திடுவார்! பொதுநலத்தில் - கருத்தொன்றி நின் றிடுவார்! நீணிலத்தில் நீயெடுத்த சாதனையில் வென்றி கண்டாய்! நின்விஜயம் விம்முற்று வாழியரோ' 108