பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. சோவியத் விஞ்ஞானிகளுக்கு செளத்ரி எத்தனையோ தாரகையை விண்ணகத்தில் ஏற்றிவிட்டீர் ! இவ்வுலகம் அவற்றையெலாம் ஏறிட்டுப் பார்த்தபடி. நித்தம் வியக்குதையா! நீணிலத்து மானிடர்கள் நெஞ்சுரத்தில், விண்ணியலில் நிமிர்ந்தவுங்கள் பொன்னாட்டின் வித்தைமிகு வாஸ்டாக்கின் விண்ணுயர்ந்த சாதனை போல் வேறொன்றைக் கண்டிக்கு வியப்படைந்த தில்லை, ஐயா! - தங்கத்தால் எடைபோடும் தனிச்சிறப்பை உம்முடைய தகைமைமிகு திருக்கரங்கள் தாரணியில் பெற்றதையா! எங்களது பூமித்தாய் எவ்விடத்தும் தரிசு நிலம் இல்லாத பான்மையென, எங்கெங்கும் எழில்பரயும் மரகதத்தின் பசுமையொடு தோற்றியதோர் வண்ணமதை வானகத்தின் மீதிருந்து கண்டறிந்த வளமையெலாம் . உரைசெய் தீர்! அதைக் கேட்டு உள்ளம் மகிழுதையா! உரம்மிகுந்த இளங்கழுகை ஒத்தபல வீரர்களைத் தந்ததுங்கள் பொன்னாடு! தரணியெலாம் அன்னவரைத் தாய்க்குலத்தின் பரிவோடு தழுவும்! மனங்குளிரும்!" இந்தக் கணம்முதலாய் இறைவனுக்குப் பதிலாக, ஏறி நிற்கும் விண்ணரங்கில் எத்தனையோ தாரகையைச் சொந்தக் கரத்தாலே தோற்றுவித்துச் சுடரேற்றும் சூட்சுமத்தை மானிட னாம் தோன்றலிங்கு கற்றறிந்தான்! 10? -