பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. லெனின் பிறந்தார் ! எஸ். ஷிபச்சோவ் செங்குத்தாய், மஞ்சள் நிறம் செறிந்த பெருங்கரையாய்த் தெரிகின்ற வால்காவில் அன்றைத் தினத்தினிலே பொங்கியது பெருவெள்ளம் ; பூரிப்பும் புத்தொளியும் பொலிகின்ற பொற்றையின் மேல் போற்றநிற்கும் - சிம்பர்ஸ்க்கு அங்கணைந்து விம்மிவரும் ஆற்றுப் பெருக்கத்தில் அலைபாய்ந்து மிதந்திடுமோர் அணிநகராய்த் , தோற்றியதே. . வெண்ணிறத்துப் பனிப்படிவம் மிதக்குமொரு நீரோட்ட விரிவிருந்தும், பெருவெள்ளம் விண் நிவர்ந்த தெனத்தோற்றும் கண்ணெட்டும் அடிவானக் காட்சியிலே, ஒளிவீசிக் காணுமொரு குன்றிருந்தும், கால் பரப்பி வீசிவந்த தண்ணென்ற இளங்காற்று ஆப்பிள் தருக்களுக்கும் தங்கு குடி மனைகளுக்கும் மேலாகத் தாவியதே. வலிமையினை உரிமைகளை வலியுறுத்த வந்ததெனும் வசந்தப் பருவமதில் வழிந்தோடும் பெருவெள்ளப் பொலிவாங்கே கண்களுக்குப் புலனான அந்நேரம் புதுவெள்ளப் பெருக்காலே நதிமட்டும் பொங்காமல் கொலுவிருந்த உருசியமே குதூகலத்தால் அந்நாளில் கும்மென்று விம்முகின்ற கோலமெனத் தோன்றியதே. தேங்கி நிற்கும் நீர்ப்பரப்பில் சிதறுண் டிருந்த பல சிற்றூர்கள் ஆங்காங்கே தென்படவும், வசந்தத்தின் பூங்குலத்து முகைக்கூட்டம் வனந்தனிலே பொலிவுறவும், பூரிப்பும் புதுப்பொலிவும் பொங்குகின்ற ஏப்பிரலில் ஆங்கொருநாள் வால்காவின் கரைய கமைந்த அந்நகரில் அருமைத் தலைவர் லெனின் அவருலகில் பிறந்தாரே. சிம்பர்ஸ்க் : லெனின் பிறந்த ஊர்.