பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. மாவீரர் தம் நிலமே ! -- - பிரேம் தவன் நெடுங்கால லட்சியமாம் நிலவும் அருகில்வர. நீள்வானத் தாரகையும் நெருங்கி வரக் கையெட்டித் . தொடுங்காலம் வந்ததுகாண்! இணையில்லாத் துணிவாற்றல் தோய்ந்திருக்கும் மானிடரால் தொலைவெல்லாம் ' அணித்துவரப் படுங்காலம் நாம் கண்டோம்! பாரகத்தே எல்லோரும் பரவசத்தால், பெருமிதத்தால், விம்மிதத்தால் , பருக்கின்றோம்! நேற்றைக் கனவதற்குள் நேர்காணும் நனவாச்சு! நினைக்கவொ ணோ அதிசயம் தான்! நிகரில்லாப் பெருவெற்றிப் பேற்றிதனை, இந்நாளின் பெற்றியினை நாமதற்குள் பெற்றிடுவோம் என நினைக்கப் பெற்றவர் தாம் உண்டுகொலோ? இற்றைக்கோ வானத்தின் எழில் நிலவும் தாரகையும் எந்தமர் தம் காலடிக்கே இறங்கிவரக் கண்டிட்டோம்! - வெற்றியதைக் கண், காணும் விம்மிதத்தால் நம் வாழ்வே விந்தையிலும் விந்தை தாய் விளங்கிப் .. பொலிந்ததுகாண்! புகழ்லெனினைப் பெற்றெடுத்த பொன்னாடே! உலகுக்கே , புதுமார்க்கம் காட்டிவிட்ட நின்னையும் நின் புதல்வரைபடம் மகிழ்வோடு ஆயிரமாம் வகைகளிலே பாராட்டி வாழ்த்துகிறேன்! மாண்புயர்ந்த வளநாடே! மார்க்கமதை வகுத்துலகில் முதன்முதலில் வழிகாட்டும் நின் புதல்வர் வாழியரோ! பல்லாண்டு பல்லாண்டு வாழியரோ! மாவீரர் தம் நிலமே! நின்னிலத்து மா நகர் கள் வளமார்ந்து செழிக்கட்டும் வளர்ந்துவரும் அரும்பெல்லாம் 1.விரிந்து மணம்பரப்பிப் பொலியட்டும்! படு நாசப் போர்மேகம் கார்மேகம் நின்னாட்டுப் பூமியின்மேல் 108