பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. ஜெயபேரி கொட்டிடுவோம்! ரகுநாதன் சந்திரனே! சுக்கிரனே! ஜாக்கிரதை! ஜாக்கிரதை! எந்தப் பெருந்தொலைவும் எமக்கினியோர் தூரமில்லை! - உந்திப் பறந்துவந்து உன்மடியில் யாம் தவழும் . . . அந்தத் திருநாளும் அணித்தாகக் கண்டுவிட்டோம் ! கந்தருவச் சுந்தரர்கள் ககனத்தே திரிந்துலவும் விந்தைக் கதைகளெ லாம் விஞ்ஞான வெற்றியினால் - சந்ததமும் யாம்காணும் சாதனையாய், சாட்சியமாய் எந்தம் கண்முன்னால் இயங்குவதும் கண்டுவிட்டோம்! காற்றுலகம் தனைத்தாண்டி, ககனத்து வெளிதாண்டி, வேற்றுலகம் அத்தனைக்கும் விஜயங்கள் பல புரிந்து, நாற்றிசையும் புகழ்மணக்க நாம் திரும்பும் பொற்காலம் தோற்றுவதைக் காண்பதற்குத் துவஜங்கள் கட்டி விட்டோம் ! வான்முகட்டின் அயனகதி வட்டத்தே வழிவகுத்துத் தான்வகுத்த தடத்தினிலே தப்பாது சென்றுவரும் பான்மையிலே ஏவுகணை படைத்துவிட்ட சோவியத்தின் மேன்மையினைக் கண்ணர மேதினியில் கண்டுவிட்டோம்! " அன்றொருநாள் வானத்தின் அயன்வெளி வீதியிலே சென்றோர் வளையமிட்டுத் திரும்பிவந்த செய்தியினை மென்றே விழுங்குமுனம் விந்தையிலும் விந்தையதாய் , இன்றோர் அதிசயத்தை எம்வாழ்வில் கண்டுவிட்டோம்! உலகத்தை விட்டகன்றே ஒருநாள் பொழுதனைத்தும் விலகியிருந் தயனத்து வீதியிலே விசைபிறக்க .. வலந்திரிந்து மீண்டுவந்த வல்லாளன் சோவியத்தின் . திலகமவன் தித்தோவின் திருப்பணியைக் கண்டு விட்டோம்! 1:10.