பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 அக்டோபர் புரட்சிக்கு வாழ்த்து பிகுநாதன் உழைக்கின்ற மக்களுக்கே உலகம்” என்றே - உலகவியல் கண்டுசொலி, உலகைத் தன்பால் - அழைக்கின்ற மார்க்ஸிய மார்க்கம் சென்றே ஆறிலொரு பூவுலகில் புதிய வாழ்வைத் தழைக்கின்ற 2 3டிச்செய்து, ருஷிய மக்கள் தளையறுத்து, வெங்கொடுமை நரக வாழ்வை இழைக்கின்ற கொடுங்கோலர் சூழ்ச்சி வென்று ஏற்றமுற்ற அக்டோபர் புரட்சி வாழி! இரந்துண்ணும் வாழ்வில்லை; மக்கள் தம்மை ஏமாற்றிச் சுரண்டுவதால் செல்வம் சேர்த்துக் கரந்துண்ணும் புல்லுருவிக் கூட்டமில்லை; ',' களவில்லை; அளவில்லாச் செல்வம் எல்லாம் நிரந்துண்ணும் புதுவாழ்வு; பொதுமை வாழ்வு; .. நீடுலக மக்களெலாம் தம்மைத் தாமே புரந்துண்ணும் பெருவாழ்வு என்னும் ஞான போதனையைச் சாதித்த புரட்சி வாழி! காவியத்தில் கற்பனையில் கதையில் மற்றும் கட்டுரையில் கண்டறியாப் புதுமை யெல்லாம் சோவியத்தில் ஒரு புதுமை இல்லை, பொய்மைச் . . சொப்பனமும் இல்லையெனப் பல்லோர் மெச்சும் பாவனையில் சொர்க்கபுரி தன்னை, இந்தப் பாரகத்தே உருவாக்கி, மக்கள் தம்மைத் தேவர்குலம் என அமரர் சிறப்புற் றோங்கச் செய்தநவ யுகப்புரட்சி வாழி வாழி! துன்மதியர் போர்வெறியர் லாபக் கொள்ளைச் - சூதாட்டக் காரர்செயும் துன்பை எல்லாம் ' கன்மவினை, சென்மவினை என்றே எண்ணிக் கண்ணிழந்து, கருத்திழந்து கிடந்த மாந்தர்