பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்மதிப்பை, தம் குலத்தை, தம்ப நலத்தைத் தாவணரச் செய்தவர்க்கே தலைமை தாங்கி நன்மதிப்பின் புத்துலகைச் சமைத்துக் காட்டி ந எனிலத்தும் புகழ்படைத்த புரட்சி வாழி! கொலைவாழ்வை நச்சுகின்ற புத்தப் பித்தம் கொண்டவர் கள் உலகமக்கள் தம்மைப் பிச்சைப் புலைவாழ்வுக்குட்படுத்தும் புன்மை தன்னைப் டோக்குதற்கோர் ஆக்கநெறி புககன்று, மக்கள் கலை வாழ்வும், களிவாழ்வும், காதல் வாழ்வும், கன வாழ்வும் மிகப்பெற்றுச் சிறந்தெந் நாளும் நிலைவாழ்வு வாழுமுறை வகுத்துக் காட்டி, நிலைபெற்றுக் கலிமுடித்த புரட்சி வாழி! இமயத்தின் எல்லை நமைப் பிரித்திட் டா"லும் " இதயத்தால் பிரியாதோம் என்றாங் குற்ற . தமையனைப்போல், தாதையைப்போல், பசியை ஆற்றும் தாயைப்போல் எம்மிடத்தே பழகி, தக்க சமயத்தில் நல்லுதவி நல்கி, இன்றைச் சகவாழ்வுக் கொள்கைக்கோர் சான்றா யாகி அமைகின்ற நல்லுறவு சிறக்க அன்றே அடியெடுத்துக் கொடுத்திட்ட. புட்சி வாழி! பிற்பட்ட நாடுகளின் சுதந்திரத்தைப் பேணி நிற்கும் கவுசமெனப் பெற்றாய்! வாழ்வில் முற்பட்டுச் சிறக்கவெணும் நாடு கட்கோ முந்தி வந்து உதவி செயும் வள்ளல் ஆனாய்! அற்பத்துப் புத்தியினால் அழிவார் தம்மை அறிவுறுத்தும் சற்குருவும் ஆனாய்! எங்கள் கற்பகமே! வழித்துணையே! உலகோர் நாடும் .. கலங்கரையின் ஒளிவிளக்கே! வாழி! மொழி! , 118 ' ' .