பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. எந்நாளும் வாழும் லெனின் விளாதிமிர் பவ்லினோவ் நேரியதோர் நெஞ்சிலவர் பேரிதயம் துடிக்கும்! நெஞ்சுரத்திற் சிறந்தாரை அவருணர்வு தூண்டும்! பாரில்மனத் திண்மையொடும் உண்மையொடும் செல்லும்

  • டபாதைதனை அவர் கரமே நாமறியக் காட்டும் !

பாவலர்தம் படை.ப்பினிலே நவநவமாம் ஆற்றல், பார்த்தறியாப் புதுமையென மானிடர்செய் பரவை, ஏவுகணை வான்வெளியில் தாவுகின்ற விந்தை-' . : இவையனைத்தும் லெனின்விஜயம் ஈட்டியநல் " - வெற்றி ! கன்னி நில மண்ணிலவர் நம்முடன் கால் வைத்தார் ; களத்தினிலும் உழைப்பினிலும் கரங்கோத்து வந்தார் ; முன்னடத்தும் தலைவரென, தந்தையென, நட்பின் முற்றுமுயிர்த் தோழரென ஒவ்வொருவ ரோடும் மார்க்க பந்தாய், நற்றுணையாய், சற்குருவாய் வந்தார் ; மாளாத உயிராற்றல் மலிந்தபெரு மேதை ... - தீர்க்கமுடன் நம்மவர் தம் சிந்தையிலும், நெஞ்சத் தெளிவினிலும் உணர்வினிலும் அணுஅணுவாய் - வாழ்ந்தார் ! நாமெல்லாம் மறைந்திடுவோம்' என்றாலும், நாளும் நறுமலரும் குழந்தைகளும் நவநவமாய்த் தோன்றும் பூமியிது ! ஆதலினால், அவர் என்றும் பொன்றாப் புதுமையொடு நிரந்தரமாய்ப் பல்லூழி வாழ்வார் ! ஆயிரம்பல் லாயிரமாம் முறை யவரை மாற்றார் , . அழித்தாலும் அவரென்றும் உயிர்த்தெழுந்து நிற்பார்! மாய்வறியார் ! எந்நாளும் மறைவறியார் ! இந்த மகத்துவமே லெனினென்னும் மாமேதை யாவார் !