பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. லெனின் அலெக்சி சுர்கோல் பனிவெள்ளை முடி தரித்துப் பளபளத்துத் தோன்றும் 'பைன் மரமும் பிர்மரமும் நிறைசாலை யதனில், தனி நீல நிழல்காட்டிப் பனிமூடித் தோற்றும் தட்டொட்டிக் கட்டிடங்கள் சூழ்வீதி தன்னில், பெருநகர மாந்தரது பேச்சொலிகள் நாளும் ' பிரவகித்துக் கலகலக்கும் பிரதேச மதனில், தெரிவான தந்தலைவர் தமக்கவர் தம் மக்கள் திருக்கோயில் தனையரங்கே உருவாக்கி வைத்தார் ! காலத்தின் படுநாசக் கரம்மோதி னாலும் கலங்காத கற்கொண்ட செங்கோட்டை. யாக, ஞாலத்தில் தன்னகத்தே அமைதியினை நாளும் நாட்டுமொரு திருக்கோயிற் கோட்டமது வாக, தன்னருமைத் தாயகத்தின் இதயமெனத் தகுமோர் தலத்தாங்கு மரண பிலாத் தலைவரெங்கள் - லெனின்தன் பொன்னான பூதவுடல் தனைப்பாது காத்துப் புகழ்க்கோயில் தனில்வாழப் புரிந்திட்டோம் நாங்கள்! இரவுவர மாஸ்கோவின் ட்ராம்வண்டி யோசை . 'எல்லாமும் நின்றாங்கே பேரமைதி சூழும் ; வரும் நட்ட நிசிப்பொழுதின் வரவுதனைக் கூறி மணியோசை கிரெம்லினிலே மதுரமெனக் கேட்கும்; தலைவரவர் திருமுகத்தைத் தரிசிப்ப தொப்பத் தண்ணிலவுக் கதிர் மெல்லத் தானிறங்கித் தேங்கும் ; அலைபரவும் காற்றசைவில் அமுதவிசை பாடி, அணிசெய்யும் செங்கொடியும் நிமிர்ந்தாங்கே நிற்கும்!. f4