பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. அருமை! மிக அருமை! விளதிமிர் மயாகோவ்ஸ்கி பாருலகை, பாருலகின் பலப்பலவாம் அருமைகளை நேருறவே கண்ணார நெஞ்சாரப் பார்த்திட்டேன். பாருலகின் வாழ்க்கை இது பரம் சுகம் ; வாழ்வதுவோ ஆரமுதம் போல் அருமை! அருமையிலும் தனி அருமை! ஆயினும் நம்-- பரபரக்கும் இவ் வாழ்வில் பல சமர்கள், மோதுதல்கள் சிரமங்கள், கரகரப்பு, சிக்கலெலாம் மிகவுண்டு. இருக்கட்டும். அவையெல்லாம் இருந்துவிட்டுப் போகட்டும்! பார் அங்கே ! நெளிந்தோடும் பாம்பெனவே நீண்டோடும் தெரு வீதி ; வழியெல்லாம் அணிவகுத்த வரிசையென என் முன்னே எழுந்தோங்கி நிற்கின்ற இல்லங்கள்! ஆம். அந்தத் தெருவெல்லாம் என்னதுதான் ! தெரிகின்ற வீடுகட்கே உரியவனும் உடையவனும் உண்மையிலே நானேதான்! இன்னும் பார்! தெருவெல்லாம் பல கடைகள் திறந்திருக்கும் ; கடைகளிலே திருவாயும் மலர்ந்தொளிர சிரித்து வழி பார்த்திருக்கும் சாளரத்தின் கூட்டங்கள் ! சாளரத்தே- ஆளுக்கு வேண்டுமட்டும் அறுசுவைசேர் நல்லுணவு . குவிந்திருக்கும் கொலுக் காட்சி! குடிப்பதற்கோ - ? முந்திரியைத் தேக்கி வடித்தெடுத்த தேம்பழத்தின் சோமரசம் : நாக்குக் கினிப்பூட்டும் நயம் ஜாதிப் பழ வர்க்கம் ! பொல்லாத ஈக்கூட்டம் புகுவதற்குத் தடைவிதிக்கும்', சல்லாத் துணித் திரைகள் ! சல்லாவின் பின்னணியில்