பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கறந்தெடுத்த புதுப்பாலில் காய்ச்சிவற்ற வைத்தெடுத்த , சிறந்த தனி திரட்டுப்பால்! தெரிகிறதா?

அதோ அங்கு

'குறைந்தவிலை!' என நம்மைக் கூவி அழைப்புவிடும். நிறைந்தவொளி விளக்குகளால் நின்றிலங்கும்

விளம்பரங்கள் ?

ஆம். அதுதான்--- என்னுடைய கூட்டுறவு இயக்கத்தின் நல் நிலையம் : - மின்னெனவே இயங்குமதன் வேகம். பார் ! வேகத்தால் காசு மலை யாய்க் குவியும் காட்சியைப் பஈர் !

பார்த்தாயா?

பேஷ் இதுதான் மிக அருமை! பேஷ் ! இதுவே நம் .. "

பெருமை!

மலை மலையாய்க் குவிந்திருக்கும் வகை வகையாம் நூல்கள்.

- பல

கலைக் கொலுவாய்க் கண்கவரும் கடைமுன்னால்

நின்றுள்ளம்

மலைக்கின் றேன்!

அஃதென்ன ?

என் பெயரா? மணி மணியாய் எழில்கொழிக்கும்

அப்பெயரும்

என் பெயரா? ஆமாமாம்! என் பெயர் தான் !

மிக அருமை!

என்னுடைய கவிதையெல்லாம் எனது குடியரசோடு பின்னிப் பிணைந்திருக்கும் பெற்றியிதோ காண்கின்றேன் ! ரப்பர் வளைச் சக்கரங்கள் ரஸ்தாவில் உருண்டோட, செப்பரிய கவர்ச்சியொடு செல்கின்ற வாகனம் பார் !

பார்த்தாயா ?

என்னுடைய மோட்டார்கார் ! என் காரில் செல்லுகின்ற அந்நபர்கள்-யாரவர்கள் ? ஆம். அவரென் மந்திரிகள்!

செந்நிறமாய் நின்றெளிர்ந்து தெரியுமந்தக் கட்டிடத்தில்

14