பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆஹா! மிக அருமை! அருமையிலும் தனி அருமை! வான் முகட்டைக் கிழித்துயர்ந்து வளர்ந்தோங்கும் கொடிமரம்போல் நான் வளர்ந்து சிறக்கின்றேன்! நாட்களை நீ எண்ணிக்கொள் ! வருகின்ற வாரத்தின் மத்தியிலோர் திருநாளில் திரிகின்ற விமானமெலாம் திறமையுடன் என் பகைவர் வரிசையெலாம் தகர்த்தெறியும் ! வாகைமலர் சூடி வரும்! அஞ்சேல்' என அபயம் அளித்தே எனதருகே அஞ்சாத படைவீரர் அணிவகுத்துச் செல்வதைப் பார் ! டங்காரம் கணகணக்க டமாரம் ஒலிப்பதைக் கேள்!

  • டங்டக்டக்டங் கென்று டங்கரித்து, டக்கரித்து

சிங்கம்போல் தலை நிமிர்ந்து செருப்பறையின் இசைக்கொப்ப் எங்கள் படைவீரர் எறுநடை பயில்வதைப் பார் ! அஞ்சாத நெஞ்சோடு அணிதிரண்டு தற்காக்கும் செஞ்சேனை வீரர் குழாம் செல்கின்ற அழகைப் பார் ! நானான்கு பேராக நகர்வதைப் பார் ! முரசொலியின் கானத்தின் தாள லயம் காலடியில் கேட்பதைக் கேள் ! 6வீரர்களே ! என்னுடைய விரோதியெலாம் உம் பகைவர் ! வீரர்களே ! உமையெ திர்க்கும் விரோதிகளே என் புகைவர் ! ஆரங்கே ? வருவது யார்? அவர் நந்தம் பகைதானோ ? வரட்டும் அவர் ! நல்லது தான் ! வகைதொகைகள் அறியாது மிரட்டுகின்ற பகைவர்படை மிரண்டோடிச் சீர்குலைய விரட்டிடுவோம் ! டோர்முகத்தே வென்றிடுவோம் ! மிக அருமை! “குப்குப்குப்'பென்று குலவையிட்டு முழக்குகின்ற செப்பரிய எந்திரங்கள் செயலாற்றும் வேகம் பார் ! உறுமுகின்ற என் மோட்டார் உழுபடையின் எந்திரங்கள் தரும் ஒலியைக் கேட்டாயா? சந்தோஷம் : பார் அங்கே !