பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனது தொழிற்சாலைகளில் எந்திரங்கள் பலப்பலவும் கணகணவென் றொலித்துப் பல் காரியங்கள் , செய்வதைப்பார்! அருமையுள்ள எந்திரங்காள் ! அயராதீர்! சளைக்காதீர்! கருமத்தில் தலை சிறந்து கனவேகம் காட்டிடுவீர் ! 'கும்'மென்று எதிரொலிக்கும் குரலை இனித் தாழ்த்தாதீர்! கம்யூனிஸ்ட் இளைஞருக்குக் கண்கவரும் பட்டுடைகள் : பலப்பலவும் மலைமலையாய்ப் படைத்தளிப்பீர் ! - அவ்விளைஞர் கலகலப்பை, சிரிப்பொலியைக் கைம்மாறாய்ப் பெற்றிடுவீர்! இன்னும் பார்! வனச் செழிப்பின் இலைச்செறிவின் வழியூடு புகுந்து வரும் இனிமைதரும் மென்காற்று இதம்கொடுக்கும் ) சுகத்தைப் பார்! நனிசிறக்கும் வனமலரின் நறுமணத்தின் சுகந்தம் பார்! இனிமை இது மிக அருமை! இணையில்லாத் தனி அருமை! பட்டணத்துக் கப்பாலோ பச்சைநிறப் புல்வெளிகள்! குட்டிக் குடிசை அதில் கொலுவிருக்கும்; அங்குள்ள குடிசையிலே விவசாயிக் குழந்தையிளஞ் செல்வங்கள் ! முடியடர்ந்த பெருந்தாடி, முட்டைக்கோஸ் ' - இவையுண்டு தடியூன்றும் பருவத்துத் தந்தைக் கிழவர் அவர் சுடுநெருப்பின் அருகமர்ந்து சுகமாகக் குளிர் காய்வார்! அங்குள்ள-- அன்னவர்கள் யாவருமே அதிசமர்த்தர் ; கொழுமுகத்தால் கன்னி நிலம் உழுவார். ; கவிதைதனை விளைவிப்பார் ! கங்குல் இருளகலாக் காலைப் பொழுது முதல் எங்கெங்கு நோக்கிடினும் இரைந்து செலும் தேனீப்போல் உழுவார் ; விதைத்திடுவார் ; உணவெனக்குத் கொழுத்தபசும் பால் கறப்பார்; குளத்தில் மீன் பிடித்திடுவார் ! தந்திடுவார் !