பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
    • ஐந்தாண்டுத் திட்டத்தின் போது இந்த இடத்

துக்குப் பத்து "லட்சம் ரயில் வண்டிகளில் பல விதமான கட்டிட நிர்மாணப் பொருள்கள் வந்து சேரும்; பின்னர் இவ்விடத்தில் ஒரு பெரிய உலோகத் தொழிற்சாலையும், நிலக்கரி ஆலையும் தோன்றும் ; பல்லாயிரக் கணக்கான மக்கள் வசிக்கக்கூடிய ஒரு புதிய நகரமும் இங்கு தோன் றும்” என்று சில. தொழிலாளர் கள் தமது. உரையாடலின்போது பேசியதைக் கேட்டதும், குஸ் ெநத்ஸ்க் பகுதிக்குச் சென்றிருந்த கவிஞரின் உள்ளத்தில் மகிழ்ச்சியும், கற்பனையும் பொங்கி எழுந்தன. அவற்றில் உருவான கவிதை இது. 5. குஸ்நெஸ்க்கில் நடந்த குட்டிக்கதை விளாதிமிர் மயாகோவ்ஸ்கி கருக்கிருட்டு ; கருக்கிருட்டில் கப்பிக் கனத்த மழைப் பெருக்கு ! குலவையிடும் பேமாரி விண்முகட்டில் பருக்கும், சூல்முதிரும் பருவத்துக் கருமேகச் செருக்கு! அடைமழையின் செயபேரி ! - - - - - - இத்தகைய சூழ்நிலையில், ஆங்கொருபால் தூங்கிச் செயலிழந்து பாழ்நிலையில் நிற்குமொரு பழம் வண்டி.. அதன் அடியில் மழைக்கொதுங்கி நிற்கின்ற மாந்தர் சிலர். ஆம். அவர்கள் உழைக்கின்ற தொழிலாளர். ஒரு சிலர் தாம் ! அவ்வேளை கொட்டும் பேய்மழையின் குலவைக் குரல் நடுவே, மட்டுப்படா வெள்ள வாரி முழக்கிடையே