பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுத் தளையறியாக் களிப்போடு ஒரு பேச்சு பட்டுச் சிலிர்த்தாங்கே பரந்தது காண் : "பார்த்தாயா? உழுபடையின் எந்திரங்கள் உருண்டுருண்டுத் தடம் பதிந்து வழிவகுத்த இந் நிலத்தின் வருங்காலம் அறியோமோ ? வெட்டவெளி வெம்பரப்பாய் விரிந்து கிடக்குமிந்த பொட்டலிலே நான்காண்டுப் பொழுதிலொரு கண்கவரும் பூங்கா வன நகரம் பூத்துக் குலுங்குவதை நாம் காண்டோம்! என்றந்த நல்வாக்கு ஒலித்ததுகாண்! கொழுத்துப் பசை பிடித்த கும்மிருட்டு! கும்மிருட்டில் அழுத்தும் கருநிறத்து அளகச் சுருட் பர்ரம் கட்டவிழ்ந்து சரிந்தாற்போல் கனத்துத் திரண்டிருண்டு கொட்டுகின்ற பேய்மழையின் கொக்கரிப்பு ! குளிர்வா டை ! இந்நிலையில்: உளைச்சேற்றுத் தரைமீது ஒதுங்கிப் புகல் தேடி, துளைக்கும் பனிக்குளிரில் சுருங்கி, நடுநடுங்கி உழைப்பாளர் சிலராங்கே உட்கார்ந் திருக்கின்றார். வாட்டும் குளிர் வாடை வாதைக்காய், சுருட்டுத் தீ மூட்டிக் குளிர் காய முனைகின்றார். அத்தீயோ செந்நிறத்துப் பொறி சிதறிச் சிறிதே ஒளி சிதறிப் பின்னர் அந்தப் பேரிருட்டுப் பிழம்பினிலே உயிர் நீக்கும். இந்நிலையில் : . ஆமாமாம் ! இந்நிலையிலும் அந்தப் பொன்னுரையாம் குரலாங்கே பொங்கியெழுந் தேஇருளில் மின்னலெனப் பளிச்சிட்டு மேலோங்கும் : ஆம். இன்னும் நான்காண்டுக் காலத்தில் நல்வாழ்க்கை கமகமக்கும் பூங்காவன நகரம் பூத்துக் குலுங்குவதை நாம் காண்போம் ! நிச்சயமாய் நாம் காண்போம் !"> இந்தவொரு நல்வாக்கை இயம்பியதோர் திருவாயோ?