பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொந்தும், உயிர் குடிக்கும் குருத்துள் வேல்பாய்ச்சும் குளிரால் பொலிவிழந்து, குருதி நிறம் கரிந்து, வெளிறித் தோல் வீங்கி வெடித்த உதடுகள் தாம் ! என்றாலும்- “ அன்னவர்கள் தாமுரைத்த ஆசைக் கனவுமொழி பின்னொரு நாள் நனவாகும் ; பிசகாது' என்னுமொரு உண்மைதனை அன்னவர்தம் உருக்குத் திருக்கரங்கள் உலகுக்கே பறைசாற்றும் ! எங்கும் மழைத்தண்ணீ ர் ! ஈரம் ! சதசதப்பு! தங்கியுள்ள இடந்தனிலோ தலைமேல் நீரொழுக்கு . , கங்குல் / முகம் தெரியாக் காரிருட்டு ! இத்தகைய சங்கடத்தில்.......அங்கிருந்தோர் தவித்துடலம் தான் சுருக்கி, பசைபோற் குழைந்தீரம் படிந்திருந்த ரொட்டிதனை " அசை போட்டு, தம் பசியை ஆற்றி அயர்ந்திருந்தார் . கண்ணிருளச் செய்யும் தம் கடும்பசியும், மறந்துமனக் கண்ணால் இருள் கிழித்து, காத்திருக்கும் எதிர் காலப் பொன்னுலகைக் கண்டுள்ளம் பூரிப்பார், சோவென்று பொழிகின்ற மழையொலியும் புதைந்தடங்க வாய்திறந்து மொழிகின்றார் : "ஆம். இன்னும் நான்காண்டுக் காலத்தில் நல்வாழ்க்கை கமகமக்கும் - பூங்கா வன நகரம் பூத்துக் குலுங்குவதை , நாம் காண்போம் நிச்சயமாய் நாம் காண்போம்; - இதோ இந்தக் காட்டுக்குள் வசிக்கின்ற கரடியெல்லாம் கூண்டோடு ஓட்டம் பிடித்தோடி உயிர் பிழைக்கும். 'ஏனெனிலோ-? 2!