பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டை நிலம் திருத்திக் கற்பாறை தனை யுடைக்கும் வேட்டு வெடி முழக்கம் விம்மும் ; எதிரொலிக்கும் ! கரம்பாய் வெறுந்தரிசாய்க் காணும் நிலப்பரப்பின், உரம்பாயும் நாம் செலுத்தும் உழுபடையின் கொழுமுனைகள்! நெருப்புத் தழல்கக்கி நிலக்கரியைத் தின்றுவக்கும் இருப்பரக்கன் போலிங்கே எந்திரங்கள் தாம் முழங்கும் ! இம்மட்டோ ? இந்நிலத்தே எந்திரங்கள் பற்பலவும் கும்மென்று எதிரொலித்துக் குலவையிட, ஆலை பல ஜம்மென்று தலைதூக்கும் ! சங்கொலியும் நம்மவரை வம்மின் எனப்பாடி வரவேற்கும் !.. அம்மட்டோ ?........ சீதளஞ்சேர் .........பனிவாடை சிலிர்த்து உயிருலுக்கி வேதனைசெய் * சிவேரியிலே வெப்பம் கொணர்ந்தூட்டும் சோதியெனப் பன்னூறு சூரியரை, செந்நெருப்பை ஊதும் கணகணக்கும் உருக்குலையைப் புதியன வாய்ச் 'சாதிப்போம்: நம் நாட்டின் சர்வஜன சங்கத்தார் அத்தனைக்கும் தனித்தனியாய் அழகிய நல் வீடு பல சித்திக்கச் செய்திடுவோம் ! தின்பதற்கோ-? தூய வெள்ளை. நிறம்படைத்து, விலை மலிந்து, நிறைமிகுந்த ரொட்டிகளைத் தரம் தரமாய் வேண்டுமட்டும் தட்டின்றித் தந்திடுவோம் ! இவ்வாறாய் - உரம் மிகுந்து வளம் செழித்து ஓங்குகின்ற இந்நிலத்தே மரம்போன்று வேரூன்றி வாழ்ந்திடுவோம் ! இவ்வளவோ ? -கண்ணெட்டுத் தொலைவரைக்கும் கண்ணுக் கினிய பசும் பண்ணைவெளிப் பரப்பJாய்ப் பார்ப்போம் ; அகமகிழ்வோம்! அடர்ந்து வளர்ந்த பெரும் அரணியமாம் *டைகா.வைத்

  • சிவேரி : - சைபீரியா ("முழு து மொரு பேய் வன மாம். சி ேவரியிலே-பாரதி)
  • டை கர : ' சை பீரியரககி லுள் ள, உ ல் திலேயே பெரிய திரன கர் (டு