பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடர்ந்தே அழித்ததனைத் துரத்தி, சுபைகாலாம் ஏரிக்கரைக் கப்பால் ஏகிடவும் செய்துள்ளம் பூரிப்போம் ; புளகிப்போம் ; புதுவாழ்வு கண்டிடுவோம்! இவ்வாறாய்--- கவிந்துவரும் காரிருட்டுக் கருத்திரையைத் தோலுரிக்கும் அவிந்தடங்கா ஆர்வமொடு அவருரைத்த சொற் - கேட்டேன்! "நான்காண்டுக் காலத்தில் நல்வாழ்க்கை கமகமக்கும் பூங் கா வன நகரம் பூத்துக் குலுங்குவதை நாம் காண்போம் !! எனும் அச்சொல் நான் கேட்டேன் ! ஆம். ஆம். ஆம்! அன்னவர்கள் சொல்லதனை அப்படியே நம்புகிறேன். இந்நிலத்தே அன்னவர்கள் எடுத்துரைத்த பொற்புமிகு பூங்கா வன நகரம் பூத்துக் குலுங்குவதை நான் காண்பேன். நிச்சயமாய் நான் காண்பேன் ! ஏனெனிலோ - ? பத்திளமை சோவியத்துப் பூமியினில் இந்நாளில் இத்தகைய பேரார்வம் இசைந்திட்டோர் இருப்பதனால், '. இத்தகைய எதிர்கால இன்பக் கனாக்களெலாம் ' சத்தியமாய், நித்தியமாய், சாஸ்வதமாய், வாஸ்தவமாய்ச் சித்திக்கும்! இதில் எனக்குச் சிறிதேனும் ஐயமில்லை!

  • * பை கால் : ஓர் ஏரி (சோவியத் ரஷ்யாவின் தூரக்கிழக்குப் பிரதேசத்தில்

உள் ள து.)