பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“(ஒரு சூரியக் கதிரின் பாதை' என்ற தலைப்பில் இந்தக் கவிதையின் ஆசிரியர்கள் இருவரும் சேர்ந்து கூட்டாக ஒரு நீண்ட கவிதையைச் சமீப காலத்தில் எழுதி முடித்துள் ளார்கள், அந்த நெடுங்கவிதை சோவியத் தாஜிக் கிஸ் தானின் இன்றைய வாழ்க்கையைப் பிரதிபலிப்ப தாகும். அந்த நெடுங்கவிதையின் ஒரு பகுதி 6. ஒரு கம்யூனிஸ்டின் வாழ்க்கை மிர்ஸோ துர்சுன் ஸாதே ; போக்கி ராக்கிம் ஸாதே (தாஜிக்கிஸ்தான் கவிஞர்கள் ) உண்மையுள்ள கம்யூனிஸ்ட் ஒருவன் தன் வாழ்க்கையிலே கண்டறியும் செயல்புரியும் கடமையிலே வாழ்ந்தறியும் சம்பவங்கள் ஆனவற்றைச் சவிஸ்தார மாய்உமக்கு எம்பாவால் இத்தினத்தில் எடுத்துரைப்போம்............. .............. கம்யூனிஸ்ட் தன் காலம் தனையுணர்ந்த தலைமகனாம்; ஆதலினால், தனக்களித்த புதுப்பணியைத் தனிப்பணியைத் தன் மனத்தில் நினைத்தவனாய், குளிர்ந்ததொரு நிசிப்பொழுதில் காலாற மனைநோக்கி அவன் நடந்தான்; மாவீரன் போலவனே வாழ்ந்திட்டான் ; அவனுக்கு வாய்த்ததொரு புதுப்பணியும் ஆழ்நோக்கும், கண்டிப்பும் அமைந்த அதிகாரிகள் தம் உத்தரவாம் ; ஆதலினால் உயரிடத்தார் வழங்கியதோர் உத்தரவை நிறைவேற்ற ஓர் தூரத் தலத்துக்கே ஏகும் கடமையினை ஏற்றிருந்தான் ; அவ்வாறு போகும் இடந்தன்னில் இல்லாத, பொல்லாத அதிகாரம், தற்பெருமை, ஆர்ப்பாட்டம், தடபுடல்கள் முதலான சிறுமைகளில் முனையாமல், தன்னருமை மக்களொடும் ஓய்வின்றி மனப்பயமும் சிறிதின்றி 24.