பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் அழியான் ; நம்மருமை ஆசிரியன், வழிகாட்டி, தவப்புதல்வன் மேதை லெனின் தந்ததொரு பேரொளியில் வீறுநடை போட்டவனும் முன்னேறிச் சென்றிடுவான்... 1.பாருங்கள் ! அதோ அந்தப் பணியாளன் துயிலாழ்ந்த வீடுகளைப் பின் விடுத்து விரைவாகச் செல்கின்றான், பாடுகின்ற மனவரங்கில் “பருத்தியெனும் பாட்டொன்றும் எழுவதனை உணர்கின்றான் ; என்றாலும் ஓரெண்ணம்!' 'முழு முட்டாள் கூற்றன்றோ ? முற்றிலுமே வெறும் ': பிதற்றல் ! விடுமுறைபோல் உழைப்பதுவாம் ! மலர்கின்ற பருத்தியுமாம் ! அட்டாவோ! எத்தகைய அபத்தமிது ?' பருத்தியினை வளர்த்துப் பயிராக்குகின்ற வளமையினை அவன்லகுவாய் விளம்பிடுவான். பருத்தியினை விளைவிக்க எத்தகைய , பெரும்பாடும், பேருழைப்பும் தேவையெனும் பெற்றியினை அரும்பாடு பட்டுணர்ந்த அவன் நன்றாய் அறிந்திருந்தான். அவன்காரத்தில், தலைமுடியில், அழுக்கடைந்த திருமுகத்தில் எவண் நாமே பார்த்தாலும் பருத்திக்காய் எவ்வளவோ ' . பாடுபட்ட உழைப்பன்றோ பதிந்தேறித் தெரிகிறது! (பாடினராம் பாட்டொன்று ! ஹா ஹா ஹா ! பாலைவனப் பரப்பெல்லாம் கணப்போதில் பஞ்சாய் மலர்ந்ததுபோல், வரம்பற்ற சொல்லடுக்கி வாய்மலர்ந்தார் அப்புலவர் ! வாரும் புலவரையா! வழிந்தோடும் உடல்வியர்வை நீரதனை முதன்முதலில் நிமிரக் குடித்தால்தான் பருத்தியுமே தலைதூக்கிப் பஞ்சாகக் காய்க்குமென்ற கருத்தினையும் ஏன் மறந்தீர் ?' என்றவனும் - . ' ', கனல்கின்றான் ! கட்டுறுதி வாய்ந்திருந்த காளை அந்தக் கம்யூனிஸ்ட் வெட்டவெளிப் பாலைவன விவரத்தை நன்கறிவான். பாலைவனப் பரப்பதனில் பாடுபட்ட பேருழைப்பின் கோலமவன் நெற்றியிலும் கைக்களிலும் கோடிட்டுக் காட்டுவதும் அவனறிவான்! பின்னரவன் கருத்தினில் தன் வீட்டின் நினைவலையும் மேலோங்கி எழுகிறது : 26