பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேறிடத்தில் இனிமேலே வேலையாய்ப் போவதனைக் கூறி நின்றால், விரைவினிலே குடிபெயரும் சேதி சொன்னால், மனையாளும், மாதாவும், மாமியொடு குழந்தைகளும் ' - எனை நோக்கி என்னென்ன இயம்புவரோ? ஒருவேளை, வரவும்தான் மறுப்பாளோ மாமியவள் ? மனையாளும், சிறுவர்களும், தாயாரும், 'சீ ! என்ன வாழ்க்கையிது ! காற்றடித்த திக்கெல்லாம் கறங்கிவரும் சருகைப்போல் மாற்றுவதோ இவ்வாழ்க்கை?' என்றே மனத்துயரால் முனகுவரோ ? வருத்தத்தால் மூச்செறிந்து விம்முவரோ? எனவுயவன் எண்ணுகின்றான். என்றாலும், எல்லாமும் எல்லாரும் பழகிவிட்ட இந்நகரை, தம்புதிய " இல்லத்தை விட்டேகி வேறோர் இடத்துக்குச் செல்வதெனில் வருந்தாரோ ? இங்கோ சிறுவருக்கு " நல்விதத்தில் பழகிவிட்ட விளையாட்டு நண்பர்குழாம், பழகிவிட்ட தம்பள்ளி, பரிவோடும் அன்போடும், அழைக்கின்ற தம்மருமை ஆசிரியர் முதலானோர் உள்ளதையும் அவன் மனத்தில் உன் னு கின்றான். , பின்னர்வன் மெள்ள மெள்ள விர லூன்றி வீட்டருகே நடை நடந்து உள்ளே நுழைகின்றான் ; உடைகளையும் வழக்கம்போல் மெள் களவே நாற்காலி மீதெடுத்து வைக்கின்றான். * ஆங்குள்ள அனைவருமே ஆழ்துயிலில் ஆழ்ந்திருக்க - தூங்காத அவனருமைத் துணைவிமட்டும் ' விழித்திருந்தாள் ! எப்போது தன்கணவன் இல்லம் திரும்பிடி னும் . அப்போ தும் விழித்திருந்து அவனையவள் வரவேற்பாள்! கஷ்டங்கள் நிறைந்ததுதான் கம்யூனிஸ்ட் டின்வாழ்க்கை; இஷ்டமுள்ள மனைவிமக்கள் எல்லோரும் அவன் வரவைக் காண்பதுவும் அரியது தான் ! காலை முதல் இரவுவரை ஆண்மகனாம் அவனுக்கு அலுவல்களோ பலப்பலவாம்! இந்நிலையில் அவனரும்ை இல்லாளும் அவனுக்காய்க் கண்ணிரண்டும் தூங்காது காத்திருக்கத் தான் வேண்டும்! உள்ளுக்குள் வந்தவுடன் பெற்றுவந்த உத்தரவை 27: '.