பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெள்ளத்தன் மனைவியிடம் நீட்டினான் ! வேறென்ன பேசுவது? இடமேது பேச்சுக்கு? பின்னரவன் ஆசையுடன் தன் மனைவி அருகினிலே சென்றவளின் கன்னத்தில் முத்தமிட்டுக் களிகூர்ந்தான். அதன் பின்னர் தன்வீட்டு முகடுதனைத் தலை நிமிர்ந்து, அவ்விடத்தில் உருக்குலைந்தும் கிழிபட்டும் உபயோகம் அற்றுவிட்ட செருப்பிரண்டு தொங்குவதைச் சின்னேரம் பார்த்திட்டான். சென்று விட்ட பழங்காலச் சீர் கெட்ட வாழ்க்கையினை இன்றும் நினைவுறுத்தும் எச்சமென, அவன் தந்தை , அச்செருப்பைத் தொங்கவிட ஆணையிட்டுப் போய் மறைந்தார். எச்சமதை அவன்கண்ணால் ஏறெடுத்துப் பார்க்கின்ற . . காலமெலாம், தா தையவுன் களைப்புற்ற, உணர்விழந்த. காலிரண்டைக் காண்கின்ற காட்சியே மனத்தோங்கும்! இதனாலே, அவன் வாழ்வில் எத்தனையோ மேம்பாட்டை பதவிகளைப் பெற்றாலும், பழஞ்செருப்பாம் | அவையிரண்டைத் தந்தையவன் தரித்தவனாய், தடித்துவிட்ட கரந்தன்னில் கொந்துகின்ற மண்வெட்டி கொண்டவனாய், விளை நிலத்தில் அடியெடுத்து நடக்கின்ற அவலத்தை அச்செருப்பும் நொடிப்பொழுதில் அவனுளத்தில் நினைவூட்டி , விட்டுவிடும்!........ இன்னும் சிலதினத்தில் இங்கிருந்து குடிகிளம்பி அன்னவனும் புது இடத்தை அடைந்திடுவான் ; ஆங்கவனை எதிர்நோக்கும் பணி மிகவும் சிரமம்தான் என்பதையும் மதித்தறிந்து கொண்டிருந்தான்... - மற்றும், அவன் இப்போதோ கண்ணிரண்டால் ஜன்னல்வழிக் காண்கின்றான் ; மணிக்கணக்கின் எண்ணமின்றி நெடுநேரம் இவ்வாறே பார்த்திருப்பான். ஏனென்றால் ஆங்குள்ள இலைதழையும், செடிகொடியும், கானகமும், மலரினமும் அவன் இதயம் கவர்ந்தவையாம் !