பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருநாளில் தான் சென்று வசித்திருக்கப் போமந்த ஒருநிலத்தைமனத்தெண்ணி, உட்கார்ந்து, புகைபிடித்துச் சிந்தனையில் தனை மறந்து செயல் மறந்து இருக்கின்றான் ! அந்தத் தொலை நிலத்தில் அவனை அறிந்தவர்கள் ஆருமில்லை ; என்றாலும் அவ்விடத்தார் இதயத்துள் நேருறவே புகும்வழியை, நெறிமுறையை அவனறிவான்! அவரெல்லாம் ஒப்புகின்ற ஆலோ சனை யளித்தும், அவர் யாவும் சம்மதிக்கும் அதிகாரம் தனைப்பெற்றும், பணியாற்றல் அவன் பொறுப்பு;பழக்கமிலா அவ்விடத்தில் துணையேதும் கிட்டாது ; துணையாவும் அன்னவரே! , , தொண்டதனை எப்படித்தான் தொடங்குவது? .: வார்த்தைகளைக் கண்டறிந்து பேசுவதும் எப்படியோ? கஷ்டம்தான்! பதினேழு மொழிகளை யும் பயில்கின்ற அவரிடையே பொதுமொழியைக் கண்டறிந்து புரிகின்ற நல்விதத்தில் எவ்வாறு பேசுவது? எல்லாமே கஷ்டம்தான்! இவ்வாறு நினைத்தபடி இருந்தாலும், அவன்கலங்கான், ஏனென்றால், நண்பனென எல்லோரும் தனையேற்க தான் தனது வாழ்க்கையையே அவருக்கே தத்தமெனச் செய்துவிட வேண்டுமெனும் செய்தியினை அவனறிவான். 'வையகத்தின் சக்தியுன்றன் வசமாக வேண்டுதற்காய் உலகத்தில் வேர்பாய்ச்சி ஊன்றி நின்றும், மக்களர் தம் இலகிடும்பே ராற்றலிலும், எல்லையிலா அறிவினிலும் " பங்கெடுத்தும், அவரையெலாம் பாசமொடு நேசித்தும், அங்கவர்தம் உறவாலே அரிய பல கற்றறிந்தும், அவருக்கே உதவிகளும் ஆதரவும் பலதந்தும், அவருக்கே வழிகாட்டும் ஆசிரிய னாயிருந்தும், அவருளமும்உன்னுளமும் அணைந்தொன்றாய்த் துடிதுடிக்க, அவர் தோல்வி உன்தோல்வி, அவர் மகிழ்ச்சி உன் மகிழ்ச்சி என்றாகும் விதத்தினிலே இணைந்துவிட வேண்டும் நீ! பொன்றாத மனிதகுல வெள்ளமெனும் பொதுக்கடலில் துளிபோலக் கலந்திணைந்து, சூரியனின் பொன்மயமாம் ஒளிக்கதிர்போல் அவர்க்கெல்லாம் இதம் அளித்து ' '.. . " : உதவுதற்கே பழகிடவும் வேண்டும் நீ!' என்னுமொரு பாடத்தை அழகாகக் கம்யூனிஸ்ட் அறிந்ததனால், அவன் கலங்கான்!