பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. வாஸ்யா மந்திர யெவ்ஜெனி யெவ்துஷெங்கோ செழிப்பான பசுமிலைகள் செக்கச் சிவந்தொளிர் ந்து - பழுப்பேறும் கார்காலம் ; பனிப்படிவம் கூரையிலும், தெருக்களிலும் வழிந்திறங்கித் தேங்குகின்ற காலம்; அதில் உருக்கென்னும் உறுதியொடு வாஸ்யாவும் உட்கார்ந்து - மனுக்கள், கடிதங்கள், மகஜர் எனப்பலவாம் : தினுசில் தினந்தினமும் ஏதேதோ தீட்டிடுவார். .. உங்களுக்கும் என்றனுக்கும் உற்றவர்க்கும் மற்றவர்க்கும் அங்கவரும் இலவசமாய் அயராது எழுதிடுவார். அக்கறையும் ஒப்புரவும் அடுத்தவர்பால் கொள்ளுமனப் பக்குவத்தால், பண்புளத்தால் பணியிதனை அவர் புரிவார். பொதுநலத்தைக் காக்குமொரு புனிதத் திருவெறியால் , ' . பொதுமக்கள் தேவையெல்லாம் புரிந்திடுவார் ; அவற்றுக்கே அட்டவணை தயாரிப்பார் ; அவதியுறும் பிணியாளர் கஷ்டமெலாம் நீங்குதற்குக் கவனமுடன் புதுமருந்துப் புட்டிகளை வாங்கிடவும், எல்லோர்க்கும். புதிதான கட்டிடத்தில் இடம்பெறவும் கருத்துடனே அவர், - - - - முனைவார். ' வயததிகம் ஆனாலும், வாழ்க்கையிலே தோன்றுகின்ற', .. துயரத்தைப் பொறுமையொடும். பெருமையொடும் , ' தோற்கடிக்கும் உறுதியினை வாஸ்யாவும் உள்ளத்தே கொண்டிருப்பார். வரு துயரம் எதுவெனினும் வயதான அனுபவத்தால் தரவென்று தள்ளாமல் துச்சமென எண்ணாமல் பாவிக்கும் மனப்பாங்கின் பக்குவத்தைப் பெற்றிருப்பார், சோம்பல் சிறிதுமிலச் சுறுசுறுப்போ டெந்நாளும் வீம்புடனே அவர் பிறர்க்காய்ப் போராடி வென்றிடுவார், . தலைவர வர் காலினினின் தாடியொடும், உருச்சிறுத்து மெலிந்திருக்கும் உடம்புடனும், ரயில்வேயில் வேலைசெயும்

  • காலினின் : ருஷ் யப் புரட்சித் தலைவர்களில் ஒருவர் .

ப " -