பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊழியர்கள் அணிந்திருக்கும் பழையதொரு உடுப்புடனும் வாழ்ந்திருந்தார் என் மாமா வாஸ்யாவும்! என்றாலும், எக்காலும் அவரிடத்தே ஏதோவோர் இதமான பக்குவமும் தாயன்பின் பரிவுணர்வும் குடியிருக்கும்... மூப்படைந்தார் என்றாலும் என்றென்றும் முடிவறியா வாய்ப்டையடைந் தாற்போன் று வாஸ்யாவும் வாழ்ந்திருந்தார்! வென்றுவிட ஏலாத வியாதியெ ன முதுமைவரும் என்றாலும், வாஸ்யாவை எண்ணுகின்ற காலத்தே தாங்குதற்கு முடியாத தவிப்புத்தான் நம்மிடத்தே ஓங்கிக் குறுகுறுக்கும் ; உள்ளத்தை வதையுறுத்தும் துன்பத்தின் வேதனையை, துயரமிகு வாழ்நாளைக் . கண்கொண்டு பார்த்தவர் தான் என்றாலும் கருணையினை : நெஞ்சினிலும் துணிவினிலும் நிறைத்தவரும் , வைத்திருந்தார் ... இரயில்வேயில் கடைவகுப்புப் பெட்டி. யிலே பணியாளாய்த் துயில்மறந்து, எந்நாளும் துணைசென்று, தொண்டாற்றி, உருசியத்தின் செய்தியினை உருசியத்தின் மண்ணெங்கும் வரிசையுடன் கொண்டேகி வாழ்ந்தவர் தான் .. வாஸ்யாவும் ! வாழ்நாளில் அவர்கண்ட வாதனைகள், கொடுந்துயரச் சூழ்நிலைகள் எத்தனையோ? சொல்லில் அடங்கிடுமோ? உலகில் இரு யுத்தங்கள் ; உள் நாட்டில் யுத்தங்கள் ; கலகங்கள் ; எப்போதும் மரணத்தின் கடுங்கோலம் ! ராணுவத்தின் காலோசை ; நாசத்தால் நாடெங்கும் . பேணுகின்ற பெற்றோரை இழந்திட்ட பிள்ளையர்கள் ! கண்ணிழந்து குருடான சிப்பாய்கள் தெருக்களிலே பண்ணிசைக்கும் கீதங்கள் , உருசியத்தின் பரப்பெல்லாம், நெடுகிலுமே பெருங்கூட்டம் நடந்து செலும் பேரோசைக் கிடுகிடுப்பு! இதனோடு வாஸ்யாவும் கீழ்மேலாய்ச் : சென்றிட்டார் ! வைத்தியராய், செவிலியாய், - சிசுப்பேற்றை - நன்றாக்கும் தாதியராய், நற்பேச்சு வீரரெனப் , பலப்பலவாம் பணிபுரிந்தார்! படுந்துயர வேதனையால் 31