பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலம்புகின்ற இதயத்தின் புண்ணாற்றும் வழிகண்டார் ! காதலர் தம் பூசலினைக் கண்டுணர்ந்து, அவர்க்கிடையே மோதலினைத் தவிர்த்தவரை மீண்டும் முயங்கவைத்தார் ! ஆதரவை இழந்திட்ட அனாதைகட்கு சூப்பளித்தார்! சேதமுற்ற அங்கமுடன் சீவித் திருந்தார்க்கும் ) பக்கத் துணையிருந்தார்! பங்கீட்டு உணவுதனை மக்களுடன் பகிர்ந்துண்டார் ! அஃதேபோல் மனத்தெழுந்த அற்புதமரம் கனவுகளை அனைவருக்கும் எடுத்துரைத்துப் பற்பலவாம் துணை புரிந்தார்! அவர் செய்யும் பணியனைத்தும் நன்மைகளை விளைவிக்க, நன்கைகளை நன்றாற்றும் தன்மையொன்றே தம்பணியாய், தாகமெனக் கொண்டிருந்தார் ! ஓய்வென்ப தவர்க்குண்டா? இல்லையில்லை ஊருக்கே ஓயாமல் உழைத்து நலம் உண்டாக்கிக் களித்திடுவார் ! நள்ளிரவு வேளையிலும் நாளெல்லாம் அவர் வீட்டில் வெள்ளிமுளைத் தாற்போன்று சன்னலிலே விளக்கெரியப் பார்த்திடலாம் ! நட்புறவும் பரிவுணர்வும் அவ்வொளியில் நேர்த்தியுடன் ஒளிர்வதனை நேரேநாம் கண்டிடலாம்! எந்நேரம் வாஸ்யாவை யாம்காண நேர்ந்தாலும் அந்நேரம் எல்லாமும் அறிவுத்தல், கண்" டித்தல், வாதித்தல், வழக்குரைத்தல், வந்தவர்க்கு உதவிடுதல், போதித்தல் எனப்பலவாம் செயல்களையே.! புரிந்திருப்பார் ! முடிவில்லாத் தற்பெருமை முழக்கமிடும் சில பேர்கள் எடுபிடியாய்த் தண்னவளே 67ண்னரிடுவார்! வாஸ்யாவோ மனுக்கள், கடிதங்கள், மகஜர் எனப்.1லவாய் தினுசில் உறுதியொடு எந்நாளும் தீட்டிடுவார்!.. 1, 1