பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. ஓக்காட்ஸ்கிலுள்ள ஆர்க்டிக் கடற்கரையில் ரிம்மா காஜகோவா அந்நிலத்தின் கடற்கரையை, அலைவீச்சை, காலநிலை .. தன்னை, தொழிற் சாலைகளை, தங்குபல வீடுகளை ' ' : நானறிவேன் ; அவற்றையெல்லாம் நன்கறிவேன் ; " அந்நாட்டில் வானம் புலருகின்ற வளமையெல்லாம் நானறிவேன் ! காலைக் கதிராங்கே கண்ணை உறுத்தாமல் மேலெழும்பும் ; வைகறையும் மெல்லமெல்லத் தான்புலரும் ? நடுக்கும் பனிப்புகையின் நடுவில் அவர் கண்விழிப்பார் ! படுக்கின்ற வேளை யிலே பனிப்புயலும் ஊளையிடும் ! சாளரங்கள் மஞ்சள் நிறத் தாளைப்போல் வெளுத்திருக்க வீழுபனிப் படி விலதன் விளிம்பெல்லாம் புதைந்துவிடும்! அன்னவர்கள் கடற்கரையில் அன்போடு கரம் நீட்ட முன்னிற்கும் நாய்க்கூட்டம் விருப்போடு தாவிவரும் : சரளைச் சிறுகற்கள் சார்ந்திருக்கும் கடற்கரையில் உருளைக் கிழங்கோடு உள்ளியுமே முளை காட்டும் இரவெல்லாம் நெடிதாக, இரவியொளி அரிதாக, வரும்புயலும் பெருங்காற்றும் கொடுங்குளிரை வரவழைக்கும்! அந்நாட்டுக் கடற்கரைஎன் அருகில்லை யென்றாலும் எந்நாளும் அதையெண்ணி முதுமையிலும் இன்புறுவேன்! வீசிவந்த கடற்காற்று விளாசியது.பனிப்புயலை /'. மோச நிலை மீனவர் தம் வலைகளுக்கே முற்றியது ! : சீறும் அலை மீனவர்மேல் சினந்தெழுந்து, அவர் கீறியதைப் புண்ணாக்கிக் கிழித்து வருத்தியது!; சோ-3