பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றாலும் அன்னவர் தம் இதயமொடு ஆத்மாவும் குன்றாமல் அதையெதிர்த்துக் கொடியுயர்த்தி நின்றனவே! இன்னபிற தொல்லை பல இடையிடையே நேர்ந்தாலும் அன்னவர்கள் வாழ்க்கையிலே அழுக்காறு சேரவில்லை. 6எஞ்சியுள்ள புகையிலையின் இறுதித் துணுக்கினையும் வஞ்சமின்றித் தமக்குள்ளே" பங்கிட்டு வழங்கிடுவார் ! கையிருப்பில் உள்ள சிறு ரொட்டியையும் கருத்தோடு டையவே செலவழித்துப் பத்திரமா புட்பக் காத்திடுவார் ! நெடி மிகுந்த, புட்டிகளில் நிறைந்திருக்கும், மதுவகையைக் குடித்துவிட்டு அவரங்கே, கும்மாளம் போட்டிடுவார்!. என்றாலும் நிதானத்தை இழக்காது, தொழில்முறையில் குன்றாமல் அவற்றை.ெ17.ரு குறைவின்றிச் செய்திடுவார்! மீன்பிடித்தல், பயிர் செய்தல், வேட்டை .பல ஆடிவரல், தான் இருக்க வீடுகளைத் தானமைத்தல் என்றாங்கே பலப்பலவாம் தொழில்களையும் பம்மாத்துப் பண்ணாமல் அலுப்பின்றி எந்நாளும் ஆர்வத்தோ டாற்றிடுவார் ! - இன்பினிலும் துன்பினிலும் அவர் தமக்குள் இணைபிரியா அன்புடனே பிணைப்புற்றுக் கருமங்கள் ஆற்றிடுவார் ! வருவதுவும் போவதுமே வழக்கமெனக் கொண்டிருக்கும் சிறுமனிசர் தமைமட்டும் வெறுப்புடனே சீறிடுவார் ! வாய் திறந்து அவருரைக்கும் வார்த்தையெலாம் பழுதாகப் போயதில்லை! வாழ்க்கையிலே பொறுப்பறிந்து குறிப்பறிந்து தங்கடமை தனையாற்றத் தவறிவிடும் மாபாவச் சங்கடத்தைக் காட்டிலுமே சாவினையே மேற்கொள்வார்! நம்முன்னே நிற்பதெலாம் நாடதனின் மானிடன் தான்! செம்மாந்து இறுமாந்து சிரம் நிமிர்ந்து நின்றாலும் அம்மனிதன் தன்னுளமோ மென்மையதாய் ஆனதுதான்! சும்மா நான் சொல்லவில்லை ! சொல்லுமந்த கடற்கரையை நானறிவேன்! அந்நாட்டை நன்கறிவேன்! அறிந்ததனால் ஆனந்தம் பெருமையெலாம் அடைகின்றேன் !' அடைகின்றேன்!