பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. வானம் நிக்கோலாய் அசயேல் இறந்தேகும் நெடுங்காலத் திருளாம் தனிலோர் நாள் எடுத்தெறிந்த ஆலயத்தின் எச்சமச்சம் போலாங்கே விரைந்தேகும் கண்ணாடிக் கோலியென விரிவானம் ) வெண்முகிலின் முகட்டிடையே வெளிரிட்டுக் காட்சிதரும்! அச்சமிலாச் சிந்தனையும் அற்புதமாம் உணர்ச்சிகளும் அமைந்திருக்கும் கவிதையெனும் ஆலயம்தான்! ஐயமில்லை ! உச்சத்தே எட்டாத உயரத்தே நெடுந்தொலைவில், உலகின்மேல், ஒற்றையிலே ஊசலிடும் காரியம்தான்! விரைந்தேகும் கண்ணாடிக் கோலியென விரிவானம் வெண்முகிலின் முகட்டிடையே வெளிரிட்டுக் காட்சிதரும்! இருந்தாலும், எதனையுமே எதேச்சையுடன் காண்பவர்க்கோ ஏகாந்தப் பெருவெளியின் சூனியம் தான் இவ்வானம்!