பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. ரோமியோ ஜூலியத் நிக்கோலாய் அசயேல் பற்பலவாம் குழப்பத்துள் பட்டுழன்று நாளும் பரிவினுக்கே ஆளாகும் மானிடரே! பாரில் அற்புதமாம் கவிதைகளும், அழகியநற் கனவும், அணிந்துரையும், புனைந்துரையும் அவையாவும் இன்றி கடைந்தெடுக்கும் பட்டறையும் கணக்கிடும்எந் திரமும் கணகணத்து விம்முகின்ற காசினியில் நீவிர் அடைந்திருக்கும் வாழ்விதனில் அகந்தனிலே என்றும் அலுப்பின்றிச் சலிப்பின்றி வாழ்வீரோ ? அந்தோ! மோனத்து லயசுகத்தில் மூழ்கி, தலை யசைக்கும் மோகனமாம் பசுமை நிறை புல்லிதழ்கள் இன்றி, வானத்துச் சுடர் போல ஒளி வாரி வழங்கும் வண்ண மலர் ஆயிரத்தின் வடிவழகும் இன்றி, இனியமணம் தனைப்பரப்பி, இளம்வாயும் மலர்ந்து - எழில்விரிக்கும் பூக்களின்றி இருந்திடவும் போமோ?. இனியுமென்ன தாமதமோ? இமைதிறப்பீர் ! எங்கும் இறைந்திருக்கும் பேரழகை எட்டு மட்டும் பாரீர்! காதில்விழும் ஒலியனைத்தும் கவனமுடன் கேளீர் ! காசினியில் காண்டரிய அற்புதமாம் இஃதே! ஈதனைத்தும் நீர்கண்டால், நீர்கேட்டால், என்றும் இவ்வாழ்வில் பெறும் பரிசுக் கிணையேதும் இல்லை ! கன்னியெழில் பொழியுமிந்தக் காலையிளம் போது கையெடுத்து அரவணைக்கும் காட்சியினை க் காணீர்! முன்னிவிரைந் தேகுமிருள் மூட்டத்தை ஆங்கே முகமனொடு செலவிடுக்கும் பனித்துளியும் பாரீர்! வான்பாடும் குருவியினை, குயிலதனைப் பற்றி ' வாயாடி, வழக்காடி, வளர்ந்தோங்கும் காதல் தேன்மொழிந்த ஜூலியத்தின், ரோமியோவின், என்றும் தீராத வழக்கைக்கண் திறந்திங்கே பாரீர் !