பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. கம்பங் கதிர்கள் அலெக்ஸாந்தர் த்வர்தோவ்ஸ்கி கம்பங் கதிர்கள் ! கம்பங்கதிர்கள் ! கம்பங் கொல்லைக் காடுகள் வழியே சுற்றி வளைந்தோர் பாதையும் தொடரும் ! மற்றுமப் பாதையின் மார்க்கமும் எங்கே, ' முடிவுறும் என்பதும் யாரே. மொழிவார்? படிவுறச் சாய்ந்த வயல்களின் மேலே அணியாய் நிற்கும் தூண்களை அணைத்துத் தணிந்தே தொங்கும் தந்திக் கம்பிகள் ! கதிர்கள்! கம்பங் கதிர்கள்! கண்கள் எதிர்செலும் பெருந்தொலை எல்லையும் தாண்டி ஆழ்ந்த நீலத் தடிவான் வரைக்கும் சூழ்ந்தும் பரந்தும் தோற்றும் கதிர்கள் ! குதிரைக் காரனின் கோடைத் தொப்பி மெதுவாய்க் கீழும் மேலும் குதிக்கும் ; மண்ணும் தூசியும் மண்டிய வண்டி கண்ணுக் கெதிரே ஊர்ந்தே கடக்கும், வளைக்கும் மடல்கள் மலிந்து காக்க; களைத்துச் சோர்ந்த கதிர்கள் அறுவடைப் பருவம் நெருங்கும் பக்குவம் எய்தும்! பரவித் தோற்றும் நெடுவயற் பரப்பின் பாரம் அனைத்தையும் பாதையே தாங்கக் கோரிடும் என்னக் குனிந்தே நிற்கும் ? அசைந்தும் மெல்லென அடியும் தோற்றும் பசும்பொன் கதிர்கள் பாரம் மிகுந்து, வண்டிகள் மீது வழிந்தே பொங்கும் உண்டியின் நெருக்கம் உற்றாற் போலே, தரையும் இனிமேல் தாங்குதற் கொண்ணா நிறையாய் மிகுந்து நெருங்கும் ; பிதுங்கும்!