பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. உறுதிபட்ட கருத்தொன்று என்மனத்தே உண்டுண்டு! அலெக்சாந்தர் த்வர்தோவ்ஸ்கி உறுதிபட்டு வேரோடி உட்புகுந்தே என்னுளத்தில் அறுதியிட்ட கருத்தொன்று : வாழ்க்கையிதள் - அளவெல்லை அருகில்லை ; காலமெனும் அகண்டபெருஞ் சாகரத்தே ஒருத்தியே இவ்வாழ்க்கை! என்பதை நான் . உணர்ந்திட்டேன்! இந்நதியின் போக்கறிந்து என்வாழ்க்கைப் படகதனை முன்னடத்திச் சென்றிடுவேன் ! இவ்வாழ்க்கை, - முழுடையுமே என்னதுதான் ! வாழ்க்கையின் இன்பங்கள், துன்பங்கள், நன்னயங்கள், புன்னிலைகள், நற்சுகங்கள், இடர்ப்பாடு என்பதெலாம் என்னதுவே! இவ்வாழ்வில் இளையவனாய், பின்பொருநாள் முதியவனாய் நான் மாறும் பெற்றியினால், இந்நாளும், இனிவருமோர் எதிர்கால நாள்பலவும் , என்னதுவே! என்பதையும் என்னகத்தே உணர்ந்திட்டேன்! காலம்தான் வாழ்க்கையின் கருவூலம் ; அரிய பொருள் போலுமிதன் ஒவ்வொரு நாட்பொழுதையுமே பயனுறுத்தி வாழ்ந்திடுவேன் ! வாழ்க்கையிது குறுகியதாய், வழிநெடுகப் பாழ்நொடிகள் நிரம்பியதாய் இருந்தாலும், பாதையதை நேர்படுத்தும் வழிகாண்பேன் ! நில்லாதும் நிலைக்காதும் , ஓர்போக்கில் ஓடுவதே வாழ்வியலின் ஒழுங்காகும்!... ஆனதனால், செயல்திறமை அற்றுவிட்டால் வாழ்க்கை நதி - தானழியும் ; வற்றிவிடும் ; தம்பிக்கும் ! என்றிடுமோர் அறுதியிட்டு வேரோடி ஆழ்ந்திறங்கி உரமேறி உறுதிபட்ட கருத்தொன்று என் மனத்தே உண்டுண்டு 39