பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. என்னை நாளும் பிடிக்காதே! பெர்தி கெர்பாப்மேன் (துருக்மேனியக் கவிஞர்) கிண்டலுக் குரிய பொருளானேன் ; கிழமாய்க் காட்சி தருகின்றேன். வெண் தலை நரையை அவர் பார்ப்பார் ; எனினும் வெட்கம் நான் கொள்ளேன். வெகுமரி யாதை அவர் காட்டி, யாஷலி என்றெனை விளம்பிடினும் வெகுநெடும் பாதை எனக்கின்னும் விரைவிற் கடந்த தாய்ப்படுமே !

  • ஓய்வு பெறுங்கள் ; வாருங்கள் ;

உட்கார்ந் திருங்கள் ; நெடுந்தூரம் போயலுத் தீர் ; உம் பழந்துணியின் புழுதியைத் தட்டிப் போடும் ' என எனக்குப் தேசம் செய்கின்றார் ; எனினும் புத்தி சாலிகளோ 'உனக்கே வயது ஆகிறது? என்றே உரைப்பார் ; டாரார் கள். ஏனெனில் என்றன் பாதையிலே முதுமைப் பருவம் எனைத்தொடர்ந்து நான்செலும் வேகம் தனைமிஞ்சி என்னை நாளும் பிடிக்காதே!