பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. மாஸ்கோ இரவுகள் எம். மாட்டுசோவ்ஸ்கி காலையொளி தோன்றுமட்டும் துயில்கலையாக் காவனத்துச் சோலையிலோர் இலைகூடச் சலசலக்கத் தோன்றவில்லை; மேலெழும்பிப் பறவையொன்றும் சிறைவிரித்து விரையவிலை. காலையிலே துயிலெழுப்பும் கதிரவனும் அரவணைக்கும் இத்தகைய மாஸ்கோவின் எத்தனையோ இரவுகளை எத்தகைய காதலொடு நான் விரும்பி இருந்திடுவேன் ! சந்திரனின் வெள்ளிமயச் சல்லா நூலிழைபோல் உந்தியெழுந் தமைதியுடன் ஓடுகின்ற சிற்றோடைக் களகளப்பு ; அற்புதமாய்க் காட்சிதரும் இத்தகைய " இளவேனில் இரவிதனில் என்றனது இதயத்தில் ' புனலதன்றன் இன்னிசையும் புகுந்துவந்து போவதையும் கேட்கின்றேன். நீயேனோ கீழ்நோக்கிப் பார்க்கின்றாய்? நாட்புலரும் வேளையிது நாமிருவர் பிரிகின்ற நேரமதை நமக்கருகே நெருங்கிவரச் செய்கிறதோ ? பாரமென என்னுளத்தை அழுத்துகின்ற பற்பலதை விடுவதுவும் சிரமம்தான் ; சுமப்பதுவோ வெகுசிரமம் ! விடிந்துவிடும் வெகுவிரைவில் ; விடியற் கருக்கலொளி மங்கி வெளிறிவிடும் ; என் அன்பே! மாஸ்கோவின் கங்குல் இரவுகளை, உண்மைமிகும் நம் காதல் உறவுதனை எந்நாளும் உளந்தனிலே நினைவுறுத்தி வருவாய் நீ என் றேநான் மதிக்கின்றேன்; நம்புகின்றேன். 42