பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. இயக்கும் சக்தி கிளெப் பாகிரெவ் வெளிர் காலைப் பொழுதினிலே வேலைக்குச் சென்றாலும், விருந்துண்டு மகிழ்ந்தாலும், வீட்டுக்கு விரைந்தேகிக் குளிர்முகத்து மனைவியொடும் குழந்தையொடும் முத்தாடிக் குலவிமகிழ்ந் திருந்தாலும், குழலூதிக் களித்தாலும், அழுதாலும், சிரித்தாலும், அகமகிழ்ச்சி பெற்றாலும், அன்பொன்றே வாழ்க்கையின் அர்த்தத்தை, சுவையதனை முழுதாக நமக்குணர்த்தும் மூலசக்தி முறையாகும் ! வீடொன்றைச் சமைத்தாலும், வெண்பனிதோய் , துருவத்தை வெற்றிகொள முனைந்தாலும், வீறுகொண்டஅணுத்துகளை வேலைக்குப் பழக்குமொரு வினை தன்னைச் செய்தாலும், எற்றி விரைந்தோடும் ஏவுகணை தனைவிண்ணின் எண்ணற்ற தாரகைமேல் ஏறிவர விடுத்தாலும், கற்றைத் திரையெறிந்து கனைத்துப் புடைபுடைக்கும் கடலாழந் தனை மூழ்கிக் கண்டறிந்து வந்தாலும், மற்றிந்த வையகத்தில் மானிடர்கள் யாவரையும் வசப்படுத்தி ஆட்டுவிக்கும் மகாசக்தி அன்பேயாம்! என்றைக்கு மானிடமும் இவ்வுலகும் எழுந்ததுவோ, என்றைக்கு ஆதாம்தன் இன்னுயிரைப் பெற்றானோ, என்றைக்குப் படைப்புலகில் இயங்கத் தொடங்கியதோ, அன்றைக்கே அன்புலகை ஆக்கிப் படைத்ததுகாண்! கதிரவன் தன் ஒளிசிதறும் காலம் மட்டும், வீசி வரும் காற்றுலகில் மூச்செறியும் காலம் மட்டும், இவ்வுலகில் இது நடக்கும்! ஆமாமாம்! இவ்வுலகின் அடிப்படையாய் என்றென்றும் அன்பொன்றே இறப்பின்றி இருந்துவரும் : எண்ணுங்கால், நம்முடம்பின் இரத்தத்தில் நெருப்பாக 'எரிகின்ற அன்புசெயும் இயக்கத்தினால் நாமும் 'விண்ணரங்கில், காற்றுமிலா வெளிப்புறத்தில் பாதைகண்டு