பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. என்னரும் உலகமே! பெட்ருஸ் புரோவ்கா என்னரும் உலகமே! எத்தனை யுகங்களோ ஏகினும் நின்னுடை இளமை குன்றிலாய் ! நின்னரும் குழந்தை நான் நினைத்திடும் வரை பிலென் நெஞ்சின் காதலும் நீங்கிடக் காண்கிலாய்! புராதன உலகமே! உன்னரும் புந்தியில் புதைந்துள மாபெரும் பொருட்குவை எத்தனை! தராதலம் நீஎனக் களவிலாத் தனத்தினைத் தந்தனை ! தயாபரி ! வந்தனை தந்தனம் ! ஆயினும் ஓர் குறை; யான்மிகப் போற்றுமென் ஆயுளும் ஒன்றே ஒன்றென அளித்துளாய்! தாயே ! ஆதலின் ஒருவரம் தந்திடு ! தாரணி வாழ்வில் நான் தங்கிடும் நாட்களை நீளுறச் செய்திடு! நேரம் வருமுனம் நீணிலம் விட்டியான் நீங்கிடா வண்ணமென் வாழ்வினை நின்னருள் வழங்குமேல், அம்ம! என் வாழ்க்கைக் கடமையை ஆற்றிட வல்லனேன் ! மானிடர் அறிவதன் மகத்துவம் அறிவை நீ! மலைப்புறச் செய்திடும் மாபெரும் பணியையும் தானவர் சுலபமாய் ஆற்றிடும் சாதனை தானும் நீ அறிகுவை ? தாரணி! நின்னெழில் மேனிலை எய்திட மேலும்யாம் செய்குவோம்! விண் ணிடைத் தொலைவினில் விளங்கும் தாரகை மீனொடும் ஆங்குந் தொடர்பினை மேவிட வேண்டிய யாவையும் யாமே செய்குவோம் ! என்னரும் உலகமே ! எமக்கு அருள்செயும் இன்பினைக் காத்திட எண்ணியே, விண்ணிடை மின்னிடும் இடியினுள், நெருப்பினுள் மேவி யான் விளைத்தவை பலப்பல! மேலும் உன்னை அழித்திடத் துடித்திடும் ஆணவ வெறியர் தம்