பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. அன்னையின் பிரிவு காய்சின் குலியேவ் என்னைப் போலவே, எனக்கு முன்னர் தம் அன்னையை இழந்தால் அபாக்கிய சாலிகள் எத்தனை இருப்பினும், அன்னவர் அன்னையர் அத்தனை மோசமாய் அமைந்திலர் என்குவேன் ! ஆங்கவர் முகந்தனில் ஆழ்ந்த சிந்தனை தேங்கினும், துயருறும் திரைப்பனி மூட்டமும் பொருந்திடும் ; என்னிரு நெற்றிப் பொருத்தினில் தெரிந்திடும் பனியென ஆங்கது தெரிதரும்! அன்னையின் கரங்களே! அடியனிந் நாள் வரை உன்னரும் கரம்தரும், உதவும் ஆற்றலை இன்னதென் றுணர்ந்திலேன்! இற்றைநாள் வரையிலும் அன்னையர் தமையிழந் தலமறும் சோ தரீர்! இன்றொடும், என்னுயிர் ஏகிடும் நாள்வரை ஒன்றி, உம் துயரினில் நானும் உருகுவேன் ! அன்னையர் தமையிழந் தலமறும் சோதரீர் !, என்னையும் உங்களில் ஒருவனாய் ஏற்குமின்! உங்களின் துயர் தனில் நானும் ஒருவனாய்ப் பங்குறச் செய்யுமின்! பாரில் நம் அன்னை யர். . தம்முடை வாழ்க்கையில் ஒரேயொரு தடவைதான் நம்மினைப் புண்படச் செய்குவர் ? நானுமப் புண்ணுடை மனத்தினேன்! கத்தியால் போழ்ந்ததோர் புண்ணினும் ஆழமாய்ப் போயதோர் புண்ணதே !