பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. காதலைப் பற்றி ஐ. செல்வின்ஸ்கி இறந்தோ, கண்மறைந்தோ, நானொரு நாள் ஏகிடின், நீ வருந்தியழப் போவதில்லை; வாராதுனக்கு அவ்வழுகை ! உன் வாழ்வின் திரும்புமுனை யானல்ல ; உண்மை இது. உன்வாழ்வு நானின்றேல் ஒன்றுமற்றுப் போகாது. உன்னிதயப் பெட்டகத்தின் உள்ளேயோர் மரங்கொத்தி தன்னலகால் வாழ்க்கையின் நற் செய்தியினைத் தட்டுவதும் எனக்காக வேதானோ? இல்லையில்லை! உண்மையிலே உனக்கேதான். நான்யாராம் ? ஒருவேளை - ஓர் நண்பன் என்றாலும் என் பங்கிற் கெனக்கும்தான் சில உரிமை இன்றுண்டு. எத்திசையும் தப்பிவிட இயலாத - வட்டமெனத் தான்வளைக்கும் வளையமொத்த காதலிலே கட்டுண்டால் வழியேது? கருத்தை அழிக்குமொரு பித்தம் தலைக்கேறிப் பிடித்திட்டால் எப்படியோ - அத்தகைய கா தல் இது. காதலுக்கே ஆட்பட்ட புறவொன்று மற்றையொரு புறவின் அரவணைப்பைப். பெறுவதற்காய், அப்புறவைப் பிரியமொடு தான் அகவி . அழைப்பதற்காய், மூச்செறியும், அன்புச் சிறகிடையே இழுத்தணைத்துக் கொள்வதற்காய், பெடைப்புறவின் இதயத்தின் - ஆழ்ந்த துடிப்பொடு தன் அன்பிதயத் துடிப்பதுவும் ஆழ்ந்து நேர்முகமாய் அழுந்தும் பரவசத்தின்' . இன்பினுக்காய், பெடைதனக்கே எதனையுமே ஈந்துவிடும்! அன்பின் வலிமையது! ஆனாலும், வேறுபட்ட நாமறிந்த நட்புறவும், நாமறிந்த மனவுணர்வும் - ஆம்,உலகில் உண்டுண்டு. அவ்வுறவில், அறிந்தவர்கள் " சும்மா சந்தித்து, சுகம் கேட்டு விசாரித்துத் தம்முள் கைகுலுக்கித் தன்வழியே செல்வதுபோல், காதல்மொழி, கைச்சரசம், கடிதங்கள், சந்திப்பு" ஈதெல்லாம் தேவையில்லை. என்கண்கள் எங்கெங்கே , '

  • .