பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரும்பிடினும் அங்கெல்லாம் தென்படுவ துன்கண்ணே! நரம்பொன்று என்னுடம்பின் நார்க்கூட்டம் தம்மிடையே புதிதாகக் கிளைவிடுத்துப் புடைத்துத் துடிப்பதுபோல் அதையுணர்வேன்! நிச்சயமாய் அறிவாய் நீ ஒன்றுமட்டும் ; பொல்லா வசைமொழிகள், பொய்கள், பழிதூற்றல் எல்லாம் உனைத்தமக்கே இரையாக்கி விட்டாலும், துன்பினிலும் இன்பிலுமுன் துயர் துடைக்க, உன்னருமை : அன்பன், அதே அரவணைக்கும் அருள் பொழியும் கண்களொடு , காலமெலாம் உறுதியொடு காத்திருப்பான்! இக்கண்கள் மேலான அன்பொடுனை வரவேற்கும் : களித்தாடும் பேர் வழியைப் போலல்ல! பெண்ணணங்கே ! நீஎனக்குப் பூரணியாய்த் தோற்றுகின்ற புண்ணியமோ? அல்லல்ல! தாரணியில் உன்னைப்போல் வேறொருவர் தனைக்காணாக் : காரணத்தால் என்னிரண்டு கண்ணுமுனை வரவேற்கும் ! 49